சாரு மஜூம்தாரின் எட்டு ஆவணங்கள் (1965 – 67)

ஜனவரி 27, 2009

சாரு மஜூம்தார்இது ஒரு தனிப்பட்ட நபரின் பெயர் மட்டுமே அல்ல. இந்தப் பெயருக்கு பின்னால் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. இந்தப் பெயர் உணர்த்தும் வரலாறும், எழுச்சியும் சாதாரணமானவை அல்ல. அதிகாரத்துக்கு எதிரான குரலாகவும், தன்மானம்சுயமரியாதைக்கு அர்த்தமாகவும், உரிமையை நிலைநாட்ட போராடும் உத்வேகத்தையும் அளிக்கும் வார்த்தையாக இந்தப் பெயர்தான் இருக்கிறது. சொல்லப்போனால் இந்தப் பெயருக்கு பின்னால்தான் இந்த நாட்டின் புரட்சியே அடங்கியிருக்கிறது.

நக்சல்பாரிஎன ஆளும்வர்க்கமும், பன்னாட்டு முதலாளிகளும் இன்று மட்டுமல்ல, இனி எத்தனை நூற்றாண்டுகளானாலும் பயத்துடன் உச்சரிக்கப் போகிறார்களேஅந்தநக்சல்பாரிஎன்ற சொல்லுக்கு பின்னால் நிற்கும், இருக்கும் மனிதர், இந்த சாரு மஜூம்தார்.

1968ம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் ஐக்கிய முன்னணியின் கூட்டணி அரசில் கம்யூனிஸ்டுகளும் இடம் பெற்றிருந்த போது டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்திலிருந்து ஒரு குரல் சீறி வெடித்தது. அந்தக் குரல் சாருமஜூம்தாருடையது. கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவராக இருந்த இவரது குரலை அவரது கட்சியே எதிர்பார்க்கவில்லை. பணக்காரர்களிடம் இருக்கும் நிலங்களைப் பிடுங்கி ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். விவாசாயிகளே நேரடி நடவடிக்கையில் ஈடு பட்டு தங்களின் நிலத்தை பணக்காரர்களிடம் இருந்து எடுத்துக் கொள்வார்கள்… என அதிரடியாக சாரு அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

சரி, அழித்தொழிப்பு நடவடிக்கையில் சாரு மஜூம்தார் ஏன் இறங்கினார்? இப்படியொரு முடிவுக்கு அவர் வர என்ன காரணம்?

1967 மார்ச் 2ம் தேதி. அதே நக்சல்பாரி கிராமம். அங்குதான் விமல் கேசன் என்ற ஆதிவாசி இளைஞர் வசித்து வந்தார். தனது நிலத்தை விமல் கேசன் உழுவதற்கு அந்தப்பிரதேச நீதித்துறை அனுமதி வழங்கியது. ஆனால், அந்தக்கிராம நிலச்சுவாந்தர்கள், நில உரிமையாளர்கள், விமல் கேசனை தனது நிலத்தில் உழுவதற்கும், உரிமை பாராட்டவும் அனுமதிக்காமல் அவரை அடித்துத் துன்புறுத்தினர்.

இதைப் பார்த்து ஆதிவாசிகளும் விவசாயிகளும் கொதித்து எழுந்தார்கள். ஏற்கனவே அங்கு புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சாரு மஜும்தார், தீவிரமான ஒரு கிளர்ச்சிக்கு தயாரானார். அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நக்சல்பாரி மக்கள் கிளர்ந்தெழுந்தனர். விமல் கேசனுடைய நிலத்தை மட்டுமல்ல, தாங்கள் பறிகொடுத்த அனைத்து நிலங்களையும் சாரு மஜும்தாரின் தலைமையில் நக்சல்பாரி மக்கள் மீட்டெடுத்தனர்.

கிளர்ச்சி 72 நாட்கள் தொடர்ந்தது. ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒன்பது விவசாயிகள் அல்லது ஆதிவாசிகள் இந்தக் கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டனர். நக்சல்பாரி மக்களின் அந்தக் கிளர்ச்சியே பின்னாட்களில் நிலச்சுவாந்தர்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும் தத்துவங்களுக்கும் பெயராகவும் அமைந்தது.

இப்படித்தான்வசந்தத்தின் இடிமுழக்கம்தோன்றியது.

ரஷ்யப் புரட்சியாளர் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் 22ம் தேதி கல்கத்தவில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நீண்ட கால மக்கள் யுத்தத்தை பிரகடனப்படுத்தி மார்க்ஸ்சிஸ்ட்லெனினிஸ்ட் கட்சியை சாரு மஜூம்தார் தொடங்கி, இன்றுடன் 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன.

அவரது தலைமையின் கீழ் தமிழகத்திலும் புரட்சிகர மா – லெ குழு தோன்றியது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியையும், தடங்களையும் அவ்வளவு சுலபத்தில் யாராலும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.

சாருமஜூம்தார் தமிழகத்துக்கு 2வது முறையாக வந்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் துரிதம் தேவை என அறிவித்த பிறகு பரவலாக பலர் அழிதொழிக்கப்பட, கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த தோழர் அப்பு காவல்துறையினரால் வேட்டையாடப்பட்டார். நக்சல்பாரிகள் சந்தித்த முதல் இழப்பும் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பும் அதுதான். தோழர் கோதண்டராமன் போன்ற பக்குவம் மிக்க தலைவர்கள், சாரு மஜூம்தாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தங்கள் வேலையை விட்டுவிட்டு கிராமங்களுக்கு சென்றார்கள்.

அதுவும் எப்படிப்பட்ட வேலை? தொழிற்சங்கத்தின் ஆணிவேராக அல்லவா தோழர் கோதண்டராமன் விளங்கினார்? தொழிற்சங்கத்தை கட்டுவது எளிதான விஷயமல்ல, என்பது அமைப்பை கட்டுபவர்களுக்கு தெரியும். அப்படி கட்டி எழுப்பிய சங்கத்தை அப்படியே போட்டுவிட்டு தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். பின்னர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்று மட்டும் அவர் அழித்தொழிப்பு செயலில் இறங்காமல், தன்னிடமிருந்த தொழிற்சங்கத்தை வைத்து புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால்..? பரவசமான கனவுதான். ஆனால், நடக்காமலேயே போய்விட்டது. அவரால் கட்டப்பட்ட தொழிற்சங்க அமைப்பை அதன்பின், வலதுஇடது போலி கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். சரி, அது முடிந்த கதை. தமிழக நக்சல் தடத்துக்கு வருவோம்.

தோழர் அப்புவை தொடர்ந்து சீராளன், பாலன், கோவிந்தன், கண்ணாமணி போன்றோர் அடுத்தடுத்து போலீஸ் மோதலில் பலியாகி விழுந்தார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் காவல்துறை அதிகாரியான தேவாரம் தலைமையில் நக்சல்பாரிகள் நரவேட்டையாடப்பட்டார்கள். இதில் புரட்சியாளர்களைவிட, பல அப்பாவி பொதுமக்கள்தான் பலியானார்கள். பிடிபட்ட புரட்சியாளர்கள் காவல்நிலையத்தில் சந்தித்த கொடுமைகளை எழுத்தில் வடிக்க முடியாது. ரத்தத்தில் தோய்ந்த வரலாறு அது.

தமிழ் புதின உலகில், இந்தி எதிர்ப்பு வரலாற்றை போலவே இந்த நக்சல்பாரி எழுச்சியும் இரட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் என்ன, என்றுமே அழியாதபடி மக்களின் மனதில் தங்கிவிட்டது. இன்றும் தர்மபுரி, வடாற்காடு மாவட்ட கிராமங்களுக்கு சென்றால் வாய்மொழி கதைகளாக அவ்வளவு நிகழ்வுகளை கேட்டறியலாம்.

இப்படியான கொந்தளிப்பும், அடக்குமுறையும் ஆளும்வர்க்கத்தினரால் கட்டவிழ்க்கப்பட்ட சூழலில், நக்சல்பாரி இயக்கத்தைத் தொடங்கிய சாருமஜூம்தார், 1972ம் ஆண்டு காவல்துறை மோதலில் கொல்லப்பட்டார். அவருடன் நக்சல்பாரி இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஆளும் வர்க்கம் ஆனந்தக் கூத்தாடியது. ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இதன் பிறகுதான் நடந்தது என்பது அப்போதும் சரி, இப்போதும் சரி அது அறியவில்லை. கிள்ளுக்கீரையாக நக்சல்பாரிகளை பிடுங்கிவிடலாம் என்பதே அவர்களது எண்ணமாக இருக்கிறது. ஆனால், பிடுங்கி எறியவும், வெட்டிப் போடவும் நக்சல்பாரிகள் ஒன்றும் கோழைகள் அல்லவே. அவர்கள் போராளிகள். இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சரி, சமூக மாறுதல் ஏற்படும் வரை, சோஷலிசம் உருவாகும் வரை இந்த நக்சல்பாரி விதை முளைத்து கிளை பரப்பிக் கொண்டேதான் இருக்கும்.

மார்க்ஸிய – லெனினிய கொள்கையே புரட்சிக்கான வழி. அதில் எப்போதுமே யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான வழிமுறைகளில் மாற்றம் தேவை என்ற சுய பரிசீலனைக்கு, சாரு மஜூம்தாரின் மறைவுக்கு பிறகு, மா – லெ குழுக்கள் வந்தன. அதனால்தான் அவரது அழித்தொழிப்பு கொள்கைக்கும் கட்சியின் சித்தாந்தத்துக்கும் போர் தொடங்கியது.

‘நீங்கள் கிராமங்களுக்கு செல்கிறீர்கள். விவசாயக் கூலிகளோடு இணைந்து பணி செய்து ரகசியக் குழு அமைத்து விவசாயக் கூலிகளின் உதவியோடு பண்ணையாகளை கொல்கிறீர்கள். பின்னர் அந்த கூலி விவசாயிகளை கட்சியில் இணைந்து கொண்டு தலைமறைவாகி விடுகிறீர்கள். நீங்கள் எப்படி உங்கள் குடும்பங்களைத் துறந்து புரட்சிக்காக கிராமங்களுக்கு வந்தீர்களோ, அப்படியே அந்த விவாசயக்கூலிகளும் குடும்பங்களை நிராதரவாக விட்டு விட்டு உங்களுடன் வந்து விடுகிறார்கள். முன்னணி தோழர்கள் கொல்லப்படுகிறார்கள். இது புரட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு. ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது, சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக இருக்கும்…’

என நக்சல்பாரி அமைப்பின் அனுபவங்களோடு எஸ்..சி என்றழைக்கப்படும் மார்க்ஸியலெனினிய சித்தாந்த அடிப்படையிலான மாநில அமைப்புக் கமிட்டியை நிறுவினார்கள். ஆயுதங்களை சுமந்து திரியும் சாகசவாதங்களை நம்பாமல் இவர்கள் கிராமங்களுக்குப் போய் மக்களை புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரட்ட ஆரம்பித்தார்கள். அணி திரட்டியும் வருகிறார்கள். மகஇக இந்த வழிமுறையுடன்தான் (நான் அப்படித்தான் நம்புகிறேன் – சூன்யம்) வீறுநடை போடுகிறது.

என்றாலும் தோழர் சாரு மஜூம்தார் என்றுமே மரியாதைக்கு உரியவர். அப்படிப்பட்டவரின் புகழ்பெற்ற எட்டு ஆவணங்களை ‘மனிதன்’ பதிப்பகம் தமிழில் கொண்டு வந்திருக்கிறது.

இந்த ஆவணங்கள் இன்றும் பொருந்தக் கூடியதா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். ஆனால், என்றைக்குமே ஒரு வரலாற்று கட்டத்தில் முன்வைக்கப்படும் ஆவணங்கள் எல்லாக் காலத்துக்கும் எப்போதும் பொருந்தும் என்று யாராலும் கூற முடியாது. இதை நினைவில் கொள்வது நல்லது. இன்று புரட்சிகர அணிகளில் பல பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் ந்த ஆவணங்களிலுள்ள சில விஷயங்கள் இன்றும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.

உதாரணாமாக, இந்தியா ஒரு அரைக்காலனியஅரை நிலவுடமை நாடு என்ற வரையறுப்பும், இதுபோன்ற நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் விவசாயிகள் கூட்டை அடிப்படையாகக் கொண்ட மக்கள் ஜனநாயகப் புரட்சியே சாத்தியம் என்ற துணிபும், அது நீண்ட கால மக்கள் யுத்தப் பாதையின் மூலம் நிறைவேற்றப்படும் என்ற வழிகாட்டலும் இன்றைக்கும் பொருந்தக் கூடியதே.

அதேபோல் இந்திய அரசமைப்பு மேலும் மேலும் பாசிசமயமாக்கப்பட்டு வரும் சூழலில், சமுதாய மாற்றத்துக்கு தலைமை தாங்க வேண்டிய கட்சி ரகசியமாக செயல்படுவது இன்றியமையாததாகும். அந்தவகையில் ரகசிய கட்சியின் அவசியத்தை வலியுறுத்திய சாரு மஜூம்தாரின் கருத்து இன்றைக்கும் பொருந்தும் அல்லவா?

நக்சல்பாரிகள் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவும், வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளவும் இந்த ஆவணங்கள் பயன்படும்.

‘வரலாற்று முக்கியத்துவமிக்க எட்டு ஆவணங்கள் (1965 – 67)’, சாரு மஜூம்தார், மனிதன் பதிப்பகம், வரகூர், அண்ணாமலைநகர், சிதம்பரம் – 608002.பக்கம்: 96, விலை: ரூ: 50,


முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை

ஜனவரி 27, 2009

முதலில் எனது வக்கிர புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும். ஜனவரி 25ம் தேதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்தும்முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடுக்கு சென்று வரலாம் என புறப்பட்டதில் எந்தவிதமான பிழையும் இல்லை. நிறைந்த அமாவாசை. அதுவும் தை அமாவாசை. எனவே மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோருக்கு எள்ளுத்தண்ணி ஊற்றி தர்ப்பணம் செய்துவிட்டு மாநாட்டை ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது என நக்கலுடன் சென்றேன் பாருங்கள்அதற்கு சரியான செருப்படியை தோழர்கள் கொடுத்தார்கள்.

இரண்டாவது பத்தியிலேயே குறிப்பிட்டு விடுகிறேன். மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்லெனினிஸ்ட்) மாநில அமைப்புக் கமிட்டிஎன எந்த அமைப்பை சேர்ந்தவனும் அல்ல நான். ‘இணையத்தில் வினவு தோழர்கள் மாநாட்டை பற்றி அதிகமாக சொல்கிறார்களேஎன்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்போம்…’ என வேடிக்கை பார்ப்பதற்காகத்தான் சென்றேன்.

சென்னை அம்பத்தூரில் மாநாடு. எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்தே புஜதொமுயை சேர்ந்த ஷேர் ஆட்டோ தோழர்கள், அமைப்பின் கொடி பறக்கும் ஆட்டோக்களுடன் வருபவர்களை வரவேற்றார்கள். இதே நிலமைதான் அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகிலும். இடம் கண்டுபிடிக்க யாரும் சிரமப்படக் கூடாது என்பதில் தோழர்கள் கவனமாக இருந்தார்கள். சாலைகள் முழுக்க அமைப்பின் சிவப்பு நிற கொடிகள் பறந்தன. எஸ்.வி. நகர் அம்பேத்கர் சிலைக்கு அருகிலுள்ள தேனீர் கடை ஊழியர்கள் உட்பட யாரை விசாரித்தாலும் மாநாடு நடைபெறும் இடத்தை துல்லியமாக குறிப்பிட்டு வழிநடத்தினார்கள்.

தோழர் சந்திப்பு வந்திருந்தால் வயிறு எரிந்திருப்பார். இதுவரை தனது பதிவுகளில் மகஇக, எஸ்ஓசி குறித்து, தான், எழுதிய விஷயங்கள் எந்தளவுக்கு புரட்டல் நிரம்பியது என்பதை நினைத்து குற்ற உணர்வால் குறுகியிருப்பார். அந்தளவுக்கு எஸ்.வி.நகர், அம்பேத்கர் கால்பந்து மைதானமே சிவப்பால் குளித்துக் கொண்டிருந்தது.

இந்தளவுக்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்காததால் பிரமிப்பு ஏற்பட்டது உண்மை. மாநாட்டு திடலே நிரம்பி வழிந்தது என்றால் அது மிகையில்லை. தமிழகத்தின் மூலை, முடுக்கிலிருந்தெல்லாம் தோழர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள்.

பல தோழர்கள் சிவப்பு நிற சட்டையை அணிந்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன், மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். ஒருவரது முகத்தில் கூட சோர்வோ, கடனே என மாநாட்டுக்கு வந்திருக்கும் பாவனைகளோ தெரியவில்லை. அனைவரது கண்களிலும் உறுதி. முக்கியமாக தோழர்களின் மனைவிமார்களை சொல்ல வேண்டும். கணவருக்காக வந்தது போல் தெரியவில்லை. விருப்பத்துடன், மாநாட்டின் தன்மையை உணர்ந்து, நம் குடும்ப விழா என்ற எண்ணத்துடன் கலந்து கொண்டவர்களை போலவே தெரிந்தார்கள். ஒருவரது கால் விரல்களிலும் மெட்டியில்லை. கழுத்தில் நகையில்லை. வீட்டிலிருந்தே தோழர்கள் தங்கள் அமைப்பை கட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும், உணரவும் இந்த மாநாடு உதவியது.

மாநாட்டில் உரையாற்றிய தோழர்களின் உரைகளை வினவு தோழர்கள் தங்கள் தளத்தில் வெளியிடுவார்கள் என நம்புவதால் அதற்குள் இந்தப் பதிவு நுழையவில்லை. பதிலாக மனதில் பட்ட சில விஷயங்களை குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

சொன்னபடி குறித்த நேரத்தில் மாநாட்டு பந்தலுக்கு வெளியே கொடியேற்றத்துடன் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை தொடங்கினார்கள். புஜதொமுயின் தலைவரான தோழர் முகுந்தன் கொடியேற்றினார். அதன் பின் செங்கொடிக்கு வணக்கம் செலுத்தியவர்கள் அமைப்பு சார்ந்த தோழர்கள் மட்டுமல்ல. அவர்கள் குடும்பமும்தான். அதுவும் 4, 5, வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்கூட கை விரல்களை மடக்கி வணக்கம் செலுத்தியதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

குறித்த நேரத்தில் மாநாட்டை தொடங்கியவர்கள், குறித்த நேரத்தில் மாநாட்டை முடிக்க முயன்றார்கள். மாநாடு முடிந்ததும், ‘மாநாட்டு பந்தலில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை ஒன்றின் மீது ஒன்றாக போட்டுவிட்டு செல்லுங்கள்அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என புஜதொமு தலைவர் தோழர் முகுந்தன் அறிவித்தார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ். என்னருகில் அமர்ந்திருந்த 60 வயதை கடந்த ஒரு அம்மா, தன்னால் முடிந்தளவுக்கு நாற்காலிகளை ஒன்றிணைத்தார். 

மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 80% பேர் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள். இதே வயதுள்ள பெண் தோழர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால், யாருமே யாரிடத்திலுமே கேலி, கிண்டல், ஈவ் டீசிங் மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கவில்லை.

ஆண்களுக்காக தனியாக கழிவறை அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலேயே ஆண் தோழர்கள் சிறுநீர் கழித்தார்கள்.

தட்டுப்பாடின்றி நல்ல குடிநீர் கிடைத்தது.

மதியம் 5 ரூபாய் விலையில் உணவை வழங்கினார்கள். முன்னணி தோழர்களில் ஆரம்பித்து என்னைப் போல பார்வையாளராக சென்றவர்கள் வரை அனைவரும் வரிசையில் நின்றே உணவை பெற்றுக் கொண்டார்கள்.

கூட்டத்தை அமைப்பு தோழர்கள் ஒழுங்குப் படுத்தினார்கள்.

குடித்துவிட்டு யாரும் மாநாட்டு பந்தலுக்கு வரவில்லை. (முக்கியமாக பியர்). சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

மாநாட்டு திடலில் யாரும் குப்பை போடவில்லை. அதற்கென அமைக்கப்பட்ட தொட்டியிலேயே பயன்படுத்திய பொருட்களை போட்டார்கள்.

பாப்கார்ன், சமோசா, முறுக்கு, ஸ்நாக்ஸ் மாதிரியான அயிட்டங்கள் மாநாட்டு பந்தலில் விற்கப்படவும் இல்லை. வெளியிலிருந்து அவற்றை வாங்கி வந்து தோழர்கள் மாநாடு நடைபெறும்போது கொறிக்கவும் இல்லை. கைக் குழந்தையுடன் கலந்து கொண்ட தோழர்களின் குடும்பத்தினருக்கு, அறிமுகமில்லாத தோழர்கள் கூட பிஸ்கட் வாங்கி வந்து குழந்தைகளிடம் கொடுத்ததை கண்ணுக்கு நேராக பார்க்க முடிந்தது.

மாநாட்டு திடலிலேயே, பந்தலை ஒட்டிகீழைக்காற்று‘, ‘புதிய ஜனநாயகம்‘, ‘புதிய கலாச்சாரம்‘, ‘புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிசார்ப்பில் புத்தகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது இயல்பானதுதான். எதிர்பார்த்ததுதான். தங்கள் அமைப்பு சார்பில் நடக்கும் மாநாட்டில், அமைப்பின் புத்தகங்களை தானே விற்பார்கள்? என்று நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இவர்கள் அமைப்பை சாராத, இவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் மாற்று இயக்க தோழர்களும் தங்கள் வெளியீடுகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். எந்த தோழர்களும் அவர்களை தடுக்கவும் இல்லை. வெளியேற்றவும் இல்லை. சொல்லப் போனால் உணவு, தேனீர், குடிநீர் போன்றவற்றை அவர்களுடன் இணைந்தே சாப்பிட்டார்கள்.  

புதிய ஜனநாயகம்இதழில் இதுவரை ஈழம் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள் அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்து, ஸ்பைரல் பைண்டிங் செய்து விற்றார்கள். அதேபோல்தான்தேசியம்தொடர்பாக வந்த கட்டுரைகளும். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதே திடலில்தான்தனித்தமிழ்ஆதரவு தோழர்களும் தங்கள் நூல்களை விற்றார்கள் என்பதுதான். ஜனநாயகம்!

மாநாட்டில் புஜதொமு தலைவர் தோழர் முகுந்தன், புஜதொமு செயலாளார் தோழர் சுப. தங்கராசு, புஜதொமு பொருளாளர் தோழர் விஜயகுமார், மகஇக தோழர் துரை சண்முகம், கர்நாடக உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தோழர் பாலன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இதில் தோழர் பாலன் தொழிலாளர்களுக்குள்ள சட்டங்களை குறித்து விளக்கினார். அவைகளை முதலாளிகள் எந்தளவுக்கு மீறுகிறார்கள், இருக்கும் சட்டங்களும் எப்படி நிரந்தர தொழிலாளர்களுக்கே சாதகமாக இல்லை என்பதை விளக்கினார். ஒவ்வொருவரும் பேசி முடித்ததும் மைய கலைக்குழுவினர் பாட்டு பாடினார்கள். மாலையில் அம்பத்தூர் ஓடி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மார்கெட் பகுதியில் பொது கூட்டம் நடைபெற்றது. மகஇக பொது செயலாளர் தோழர் மருதையன் சிற்றப்புரை ஆற்றினார். வழக்கம் போல் அவரது உரை அழுத்தமாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு யார் பேசினாலும் துண்டு சீட்டைக் கொடுத்து பேச்சை முடிக்க சொன்னார்கள். இந்த விதியிலிருந்து தோழர் மருதையனும் தப்பவில்லை.

ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் பலர், வேன்களில் வந்தார்கள்.

மாநாட்டுக்கான மொத்த செலவும் அமைப்பை சேர்ந்தவர்களுடையது. பல மாதங்களாக பேருந்து, தொழிற்சாலை, தொழிற்பேட்டைகளில் பிரச்சாரம் செய்து, உண்டியல் குலுக்கி முதலாளிகளுக்கு எதிராக தங்கள் வலிமையை காட்டியிருக்கிறார்கள்.

சங்கம் அமைக்க தாங்கள் பட்ட சிரமங்களை, அனுபவங்களை பல தோழர்கள் மாநாட்டில் பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக ஒரிஸாவிலிருந்து பிழைப்பைத் தேடி தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்கள் தாங்கள் அனுபவித்த, அனுபவிக்கும் துயரங்களையும், புஜதொமு அமைத்த பின் தாங்கள் எப்படி தன்மானத்துடன் வாழ்கிறோம் என்பதையும் விளக்கினார்கள்.

கள்ளச் சாராய வியாபாரியாக இருந்து, இப்போது கல்வி வள்ளலாக இருக்கும் ஜேப்பியாரின் கல்லூரிகளில் சங்கம் அமைக்க தாங்கள் முயன்றதை குறித்து தோழர்கள் சொன்னார்கள். சங்கம் அமைப்பதற்கு முன் ஜேப்பியார் தங்களுக்கு கொடுத்த மரியாதையையும், சங்கம் அமைத்த பின், அதே ஜேப்பியாரே தங்களுக்கு தரும் மரியாதை குறித்தும் தோழர்கள் பகிர்ந்து கொண்டபோது, மனதில் பூரிப்பு எழுந்தது உண்மை.

டிசம்பர் 31ம் தேதியுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் பல தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இருக்கும் தொழிற்சங்கங்கள் எதுவும் அவர்களை காப்பாற்றவில்லை. இந்தத் தகவலை பலரும் உணர்ச்சியுடன் குறிப்பிட்டார்கள்.

மாநாட்டு பந்தலுக்கு வெளியே காவல்துறையினர், ‘எதையோஎதிர்பார்த்து பாதுகாப்புக்காக நின்றார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

ஒரு பதிவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறீர்களா என்று கேட்டேன். ‘ஐயோ, வந்தா போலீஸ் பிடிச்சுக்குமேஎன்றார். எப்படியெல்லாம் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது!

பதிவுலகை சேர்ந்த ஜ்யோராம் சுந்தர், பைத்தியக்காரனுடன் (தோழர் ஏகலைவனை சந்தித்து பேசினீர்களா பைத்தியக்காரன்?) மாநாட்டுக்கும், பொது கூட்டத்துக்கும் வந்திருந்தார். தோழர் வே. மதிமாறன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார். மற்ற பதிவுலக நண்பர்களை எனக்கு தெரியாததால், யார் வந்தார்கள் என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.

பொதுவாக மகஇக அமைப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. கேள்வி கேட்பவர்களை இவர்களுக்கு பிடிக்காது. க்ளீன் ஸ்லேட்டாக இருப்பவர்கள்தான், இவர்களுக்கு தேவைஎன மாற்று அமைப்பினர் அவ்வப்போது இவர்கள் மீது விமர்சனம் வைப்பார்கள். அது எந்தளவுக்கு புரட்டு என்பது இந்த மாநாட்டில் தெரிந்தது. அப்படி மாற்று அமைப்பினர் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் அதில் தவறும் இல்லை. க்ளீன் ஸ்லேட்டில்தானே அழுத்தமாக எழுத முடியும்?

ஒரு அமைப்பை கட்டுவது என்பது எவ்வளவு கடினமான வேலை என்பது அமைப்பு சார்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி பார்க்கும்போது, இந்த முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு உண்மையிலேயே புஜதொமுக்கு மாபெரும் வெற்றிதான்.

தொடர்ந்து மகஇக, பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாகவும் மாநாடுகளை நடத்த வேண்டும். அமைப்பு பணி, நெருக்கடிகள் காரணமாக தோழர்களால் கலை இலக்கிய அமைப்பில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. இனி சிறிது சிறிதாக கலை இலக்கிய அமைப்பையும் அவர்கள் வளர்க்க வேண்டும். செய்வார்கள் என்று நம்புகிறேன்.

பின்குறிப்பு: பதிவை எழுதி முடித்ததும் வழக்கம்போல் படித்துப் பார்த்தேன். மகஇக வுக்கு ஜால்ரா தட்டுவது போல் தெரிந்தது. பதிவை வாசிக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றினால்,

நல்லது. அதுகுறித்து எனக்கு வெட்கமேதும் இல்லை.


2 தலையணைகளும்… இந்தப் புத்தக கண்காட்சியும்!

ஜனவரி 24, 2009

அட, என்று புருவத்தை உயர்த்த வைத்தது இந்தப் புத்தக கண்காட்சி. காரணம் இரு வெங்கடேசன்களும், அவர்களது வெங்கடேச புராணங்களும்.

பொருளாதார நெருக்கடி, ஈழத்தமிழர்கள் படுகொலை, ஓபாமா, ஐடி ஊழியர்களின் எதிர்காலம், ‘சத்யமேவ சுருட்டல், பிரபாகரன், விடுதலைப்புலிகள், தடைசெய்யப்பட்ட நூல்களுக்கு தடை (குறிப்பாக கிழக்குக்கு தடா, பொடா!), வில்லு, படிக்காதவன், சன், கலைஞர், திருமங்கலம் சுபமங்கலம், அஞ்சா நெஞ்சன், அஞ்சிய அண்ணன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர், தென்னாட்டுடைய சிவனே போற்றி, 10 சாரு, 7 எஸ்.ரா, 3 ஜெமோ, 27 ரூபா ஜீரோ டிகிரிஇன்னபிற, இன்னபிற மனச்சாய்வுகளுக்கு இடையில் இரு புதினங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றின் போக்கை பறைசாற்றும் விதமாக வெளிவந்திருக்கின்றன.

இரண்டுமே 900 பக்கங்களுக்கு மேற்பட்டவை. இரண்டின் விலைகளும் 500 ரூபாய்க்கு மேல். இரண்டையும் எழுதியவர்கள் வெங்கடேசன்(கள்)தான். என்ன இனிஷியல் மட்டும் வேறு வேறு. ஒருவர்காவல் கோட்டம்நாவலை எழுதிய சு. வெங்கடேசன். மற்றவர்தாண்டவராயன் கதைபுதினத்தை எழுதிய பா. வெங்கடேசன்.

 

எப்படி ஆரம்பித்தது என்ற ரிஷிமூலத்துக்குள் நுழைந்தால்கலை கலைக்காகவே‘, ‘கலை மக்களுக்காகவேஎன்ற இரு வேறு தத்துவ போக்கை தொடலாம். அந்த இரு புள்ளிகளின் வழியே பயணத்தை மேற்கொண்டவர்களின் சமீபத்திய எச்சங்களாக இவர்கள் இருவரையும் காண முடிகிறது. யதார்த்தவாத எழுத்துக்கள் புனைவுகள், யதார்த்தவாத புதினங்கள் மொழி விளையாட்டுக்கள் என அவரவர் போக்கில் அவரவர்கள் கற்று, தேர்ந்து, மையமாக, மையமற்ற வார்த்தைக் கூட்டங்களை வந்தடைந்த ஒரு போக்கை இந்த இரு தலையணைகளும் உணர்த்துகின்றன.

ஒவ்வொரு ஆண்டுமே இப்படியான இருவகைப்பட்ட புதினங்களும் வெளியாகின்றன என்றாலும் இந்த ஆண்டு குறியீட்டு தளத்தில் முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம், இந்த இரு நாவலாசிரியர்களின் பெயர்களும் வெங்கடேசனாக அமைந்தது மட்டுமே ல்ல.

உதாரணமாக யதார்த்தவாத புதினமானகாவல் கோட்டத்தைஎடுத்துக் கொள்வோம். இதன் வெளியீட்டாளர், ‘தமிழினிவசந்தகுமார். தீவிர இலக்கிய புத்தகங்களை வெளியிட்டு வருபவர். ஜெயமோகன், நாஞ்சில்நாடன், சு. வேணுகோபால், சூத்ரதாரி என்கிற கோபாலகிருஷ்ணன் போன்றோரின் ஹோல்சேல் டீலர். இவர்கள் அனைவருமே யதார்த்தவாத எழுத்தாளர்கள்தான் என்றாலும் யாருமே மார்க்ஸிய அமைப்பு சார்ந்தவர்கள் அல்ல. .நா.சு., . பிச்சமூர்த்தி வம்சாவளியினர். ஆனால், காவல் கோட்டம்சு. வெங்கடேசன், அப்படியானவர் அல்ல. மார்க்ஸிய இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொது செயலாளர். செம்மலர் வகையறா. சொல்லப்போனால் சென்ற சட்டமன்ற தேர்தலில் இந்த சுனா வெனா மார்க்ஸிய கம்யூனிஸ்ட் அணி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இவர்களுக்கும் .நா.சு வகையறாக்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். ஆனால், இந்தஇலக்கியவிஷயத்தில் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்! ஒருவகையில் மாயாவாத எழுத்துக்களுக்கு எதிரான கூட்டணி என்றும் இதை புரிந்து கொள்ளலாம்.

அடுத்துதாண்டவராயன் கதையை எழுதியிருக்கும் பா. வெங்கடேசன். இவரும் அபிவாதையே சொல்லும்போது .நா.சு, . பிச்சமூர்த்தி என்றுதான் ஆரம்பிப்பார்! என்றாலும் அதிலிருந்து கிளை பிரிந்த பிரமிள், நகுலன் குழுவை சார்ந்தவர். இவரது புதினத்தை வெளியிட்டிருப்பவர் ஆழிபப்ளிஷர்ஸ். நாகார்ஜுனன் தனது வலையில் எழுதிவரும் கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை இரு தொகுதிகளாக இந்த ஆண்டு கொண்டு வந்திருப்பவர்களும் இவர்கள்தான். அதே நாகார்ஜுனன் மொழிபெயர்த்த ஆர்த்தர் ரைம்போ கவிதைகளை தொகுப்பாக வெளியிட்டிருப்பவர்களும் இவர்கள்தான். கோணங்கியின்பாழிநாவலை இரண்டாம் பதிப்பாக இறக்கியிருப்பவர்களும் இதேஆழிதான். ஆனால், இலக்கிய வெளியீட்டாளராக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளஆழிவிரும்பவில்லை என்பது அவர்கள் இதே ஆண்டு கொண்டு வந்திருக்கும் மற்ற புத்தகங்களிலிருந்து தெரிகிறது. அதாவதுமையமற்றவெளியீட்டாளர்! இத்தனைக்கும் இந்த பானா வெனா வாழ்வது ஓசூரில். நிரந்தரமற்ற தொழிலாளர்களும், தொழிற்சாலைகளும் நிறைந்த பூமி. தொழிற்சங்கங்கள் ஆட்சி செய்யும் நிலம். எந்த திசையில் பொருளாதார நெருக்கடி எழுந்தாலும் அதன் வீரியத்தை உடனுக்குடன் அனுபவிக்கும் ஷேத்திரம். மார்க்ஸியலெனினிய குழுக்களின் தர்மஸ்தலா இந்தப் பகுதிதான். இந்த அமைப்பில் வாழும் பா. வெங்கடேசனிடமிருந்து மாயாவாத எழுத்து பூத்திருக்கிறது!

இப்படியான சூழலில் இந்த இரு புதினங்களையும் வாங்கினேன். இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. அதற்கு முன்பாக வலையுலக நண்பர்களுக்கு ஒரு அறிமுகமாக இந்த இரண்டு புதினங்களை குறித்தும் சொல்லலாம் என்று தோன்றியது. முதலில்,

காவல் கோட்டம்சு. வெங்கடேசன்

நாவலின் பின் அட்டையில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது:

ஆறு நூற்றாண்டு கால மதுரையின் வரலாற்றைப் (1310 – 1910) பின்னணியாகக் கொண்ட நாவல் இது. அரசியல், சமூகவியல், இன வரைவியல், கண்ணோட்டங்களுடன் அந்த வரலாற்றின் திருப்புமுனைகளையும் தீவிரமான தருணங்களையும் திரும்பிப் பார்க்கிறது. தமிழ் வாசகர்கள் அறிந்திராத வரலாறு இது.புதிய உத்திகள், தேர்ந்த சொற்கள், வளமான மொழிநடை, கூர்மையான உரையாடல்கள், கனக்கும் மெளனங்கள், உள்ளுறை அர்த்தங்கள்வாசகனின் கற்பனைக்கு இடம் விட்டுத் தாண்டிச் செல்வதாகவே இந்நாவலின் பெரும்பகுதி இருக்கிறது. தமிழ்ப் புனைக்கதையின் கலாபூர்வமான வெற்றிகளில் இது மற்றுமோர் சாதனை.ஆசிரியர் குறிப்பில் உள்ள விவரங்களின் சில பகுதிகள்:

கள்ள நாட்டின் வேர்கள் எல்லாம் பாளையப்பட்டுகளின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தே இம்மண்ணில் இறங்கியுள்ளன.மாடுகளை வணங்கி மேய்த்து திரிந்த கூட்டமும், அணைத்து அடக்கி வீர விளையாட்டாக்கிய கூட்டமும் பண்பாட்டில் எதிரெதிர் முனைகளில் நின்றாலும், ஒரே நிலத்தில் வாழ நேர்ந்தபோது, முரண்களை சமன்செய்தே வந்திருக்கின்றன.

ஜல்லிக்கட்டுதமிழரின் பண்பாட்டுக்கூறாகப் பாரம்பரியமாக இன்றும் தொடர்கிறது. இடையில் வந்ததொட்டி குடுப்புதொடர் வரலாற்றுக் காலத்தில் தொலைந்து போனது….லாடக்கட்டைகளுக்கு இடையில் சித்துக்கல் வரிவோடிக் கிடந்த வீட்டின் அலமாரியில் கட்டுக்கட்டாய் இருந்த பேப்பர்களை எல்லாம் அள்ளிப் போட்டுத் தேடினோம். பள்ளிக்கூடத்துக்குப் பிள்ளைகளை அனுப்பாத அனுப்பாத கள்ளநாடு அப்பன்களை போலிஸ் ஸ்டேஷன் படுக்கையில் வைக்கச் சொல்லி உபாத்தியாயினி இன்ஸ்பெக்டருக்கு எழுதிய ரிப்போர்ட் ஒன்று கிடைத்தது. 10.10.1920 என்று தேதியிடப்பட்டிருந்த அந்த மக்கிய தாளின் வழியேதான் என் பயணம் துவங்கியது. ஏறக்குறைய பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.கீழக்குயில்குடி பற்றி வரலாற்று ஆய்வு நூல் ஒன்று எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால் அதன் சாயலில் ஒரு கிராமத்தை உருவாக்க நினைத்தேன். அமண மலையின் தென்மேற்கே இடத்தை தேர்வு செய்த மறுகணமே கள்ளநாடு முழுவதும் நான் பார்த்த, கேட்ட கதைமாந்தர்கள் அனைவரும் அங்குவந்து சேர்ந்தனர். மரம் வெட்டி, மொட்டு தோண்டி, நிலவாகை சமப்படுத்தி, வீடு போட்டு ஓலை வேய்ந்து முடிந்ததும், பெரியாம்பளைகள் மந்தையில் வந்து உட்கார்ந்து கதை சொல்லத் துவங்கினர். கதை களை கட்டியது….மிஷனரிகளின் ஆவணங்கள், அரசின் ஆவணக் காப்பகங்களில் உள்ள தரவுகள், எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் கிடைக்கும் தகவல்கள், ஊர்கள்தோறும் மக்களின் நினைவுகளில் கொட்டிக்கிடக்கும் செய்திகள் என எல்லாவற்றையும் தேடி அலைந்தேன்இதன் முதல் பாகத்தில் வரும் அனைத்து மாந்தர்களும், நிகழ்வுகளும் உண்மையே. கன்னிவாடிப் பாளையம் மூக்குப்பறி மைசூர் போருக்கு 16000 வராகன் கொடுத்தது முதல் ருஸ்தம் கானுக்கு காதுவலி என்பதுவரை உண்மையான வரலாற்று தரவுகளால் ஆனது….19

ஆம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து மதராஸ் வர மாட்டு வண்டிப் பயணத்திற்கான செலவுத்தொகை என்ன? என்பதில் தொடங்கி, கள்ளநாட்டில் நடைமுறையில் இருந்த, குற்றங்களுக்கான தண்டனைச் சட்டம் என்ன என்பது வரைகங்காதேவியின்மதுரா விஜயத்தில்உள்ள பாண்டியனுடைய வாளின் பெயர் என்ன என்பதிலிருந்து களவின்போது தும்மல் வராமல் இருக்க கைமருந்து என்ன என்பது வரைஅத்தனையும் சேகரிக்க, உறுதிப்படுத்த நட்பும் தோழமையும் கொண்ட பெரும்வட்டம் என்னைச் சுற்றி செயல்பட்டது  

சு. வெங்கடேசனுக்கு வயது 38. ‘கலாச்சாரத்தின் அரசியல்‘, ‘ஆட்சித் தமிழ்: ஒரு வரலாற்றுப் பார்வைஆகிய இரு ஆய்வு நூல்களையும், ஆறு சிறு நூல்களையும் எழுதியுள்ளார். நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர்.(‘

காவல் கோட்டம்‘, சு. வெங்கடேசன், தமிழினி வெளியீடு, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கம்: 1048, விலை: ரூ: 590, )

தாண்டவராயன் கதை: சொல்லப்படாத கதைகளின் கதை முப்பத்தெட்டு சர்க்கங்களில்பா. வெங்கடேசன்

பின் அட்டை இப்படி சொல்கிறது: தன் மனைவியின் கண்நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிலிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டப்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றன், இறந்தவர்களின் உடலருந்து உருவங்களை மாயமாய் மறையச் செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தைகளையும் கற்று வைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்.மூன்றாவது அட்டையிலுள்ள குறிப்புகள்: உரையாடல்களுக்கடியில் இன்னொரு உரையாடல் ரகசியமாக எப்போதும் வெளிப்பார்வைக்கு தெரியாதவண்ணம் பதுங்கிக் கொண்டிருக்கும். ஒரு சம்பாஷணை. ஒரு கதை, ஒரு சம்பவத்தை ஆயிரம் பேர் ஆயிரம்விதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடும். அந்த ஆயிரம் அர்த்தங்களும் தனித்தனியே முழு உண்மைகளாக இருக்கவும் கூடும். உண்மையென்பது பார்ப்பவர்களின், கேட்பவர்களின், படிப்பவர்களின் கால, இட, மனவோட்டங்களைப் பொறுத்து மாறிக்கொண்டேயிருக்கிறது. புரிந்து கொள்ளவோ, நம்பவோ முடியாத வினோதங்களும் மாயங்களும் தர்க்கத்தின் குறுக்கீடற்று சகஜமாக நடக்கும் ஒரு கதைக்கு தர்க்க வழிகளுக்குட்பட்ட மற்றொரு விளக்கமும் உண்டு. ஊர் எல்லையில் முதற்பழம் கனியும் மரம், ரகசியமாக வளார்ந்த காடு இருப்பதாக சொல்லும் கதைகளும் உங்கள் சரித்திரத்தைப் பற்றி உள்ளூர் கிழவன் சொன்னது போலவே அந்த காட்டிற்குள் நுழைந்தவர்கள் இந்த உலகிற்குள் திரும்ப முடியாது. சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பவனைப் பொறுத்துதான் கற்பனையோ நிஜமோ சொல்வதற்குள் நுழைகிறது.புதினத்தை புரட்டியதுமே இப்படி வருகிறது:

இந்தக் கதையின் குறுநாவல் வடிவத்தை அது பிரசுரத்திற்குப் போவதற்கு முன் நிராகரித்ததன் மூலம் இது இப்படியொரு புதினமாக மாறுவதற்குக் கவிஞர் பிரம்மராஜன் காரணமாயிருந்தார்…. பூர்த்தியடைந்த கதையை முழுக்கப் படித்தும், பேசியும், பின் இதன் வெளியீட்டு சாத்தியங்களுக்காகவும், வடிவாக்கத்திற்காகவும் என்னுடனேயே உண்டு உறங்கி அலைந்து திரிந்தும், தன்னூலைப்போல் இந்நூல் வெளிவருவதில் நண்பர் கோணங்கி காட்டிய உற்சாகம் மற்றும் அக்கறையின் மீதான வியப்பிலிருந்தும் சந்தோஷத்திலிருந்தும் நான் இன்னும் மீள முடியாமலிருக்கிறேன்மதுரையில் பிறந்த பா. வெங்கடேசன் இப்போது ஓசூரிலுள்ள தனியார் நிறுவன் ஒன்றில் நிதிப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இன்னும் சில வீடுகள், எட்டிப் பார்க்கும் கடவுள் ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளையும், ‘ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள்என்கிற ஒரு சிறுகதை தொகுப்பையும், ‘ராஜன் மகள்என்கிற சிறுநாவல்கள் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.(‘

தாண்டவராயன் கதை‘, பா. வெங்கடேசன், ஆழி பப்ளிஷர்ஸ், 12, முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24, மின்னஞ்சல்: aazhieditor@gmail.com பக்கம்: 952, விலை: ரூ: 575)


இணையத்தில் பிரம்மராஜனின் ‘மீட்சி’

ஜனவரி 23, 2009

ஆமாம். அதே பிரம்மராஜன்தான். அதேமீட்சிசிற்றிதழ்தான். 80களில் புனைவு ஆர்வலர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உத்வேகம் கொடுத்த அதே இலக்கிய சிற்றிதழ் இப்போது இணையத்தில் வர ஆரம்பித்திருக்கிறது.

சிறுபத்திரிகை கவிஞராக மட்டுமே அறியப்பட்ட பிரம்மராஜனுக்கு சூன்யத்தில்பெரிதாக அறிமுகம் தேவையில்லை. ஆனால், அவரை கவிஞராக மட்டுமே அடையாளப்படுத்தும் சூழல்தான் வருத்தத்தை அளிக்கிறது. உலகிலுள்ள பல மாற்று எழுத்தாளர்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ஆங்கில பேராசிரியராக இருக்கும் இவரால்தான் கால்வினோ, போர்ஹே, பிரைமோ லெவி, யசுவானி கவபட்டா, மார்க்யூஸ் போன்ற எழுத்தாளர்களை தமிழ் வாசகனால் அறிந்து கொள்ள முடிந்தது. இவரது வழிகாட்டுதலுடன் கவிஞரும் (ரிஷி) மொழிபெயர்ப்பாளருமான லதா ராமகிருஷ்ணன் நிறைய மொழிபெயர்ப்புகளை செய்திருக்கிறார். அவை தொகுப்பாகவும் வந்துள்ளன.

தற்சமயம்நான்காம்பாதைஎன்ற சிற்றிதழை நடத்தி வரும் பிரம்மராஜன், மார்க்யூஸின் புகழ்பெற்ற நாவலானஒரு நூற்றாண்டு தனிமையை தமிழில் துல்லியமாக மொழிபெயர்த்து வருவதாக கேள்விப்பட்டேன். அந்த நாவலின் பிரசுர வருகைக்காக காத்திருப்பதை தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.

கவிஞர் ஆத்மாநாம் நடத்தியசிற்றிதழ் மூலமாக தமிழ் சூழலுக்கு வந்த பிரம்மராஜன் (தகவல் பிழையாகவும் இருக்கலாம்), அதன் பின்மீட்சிஎன்ற சிற்றிதழை 80களில் நடத்தினார். நாகார்ஜுனன், சாரு நிவேதிதா, சுகுமாரன், கோணங்கி, ஸில்வியா (எம்.டி. முத்துகுமாரசாமி), நஞ்சுண்டன், சத்யன்எனமீட்சிமூலமாக தமிழுக்கு கிடைத்த எழுத்தாளர்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ‘படிகள்மூலமாக அரசியல், அமைப்பியல் சார்ந்த கட்டுரைகளை நாகார்ஜுனன் எழுதினாலும், மொழி பெயர்ப்பு கவிதைகளை அவர் அதிகமும் செய்ததுமீட்சியில்தான்.

மீட்சிமூலமாக பல கவிஞர்களின் குறிப்பிடத்தகுந்த பல தொகுப்புகள் வந்திருக்கின்றன. அதில்உலக கவிதைகள்முக்கியமானது. அந்த தொகுப்பை சென்ற ஆண்டுஉயிர்மை பதிப்பகம்மறுபிரசுரம் செய்திருக்கிறது. இந்திய அளவிலான கவிதை செமினார்களில்மீட்சிகவிஞர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்  

மொழியின் சாத்தியபாட்டை, அதன் விளையாட்டை, அபத்தத்தை கவிதைக்குள்ளும், புனைவுக்குள்ளும் கொண்டு வர முடியும், கொண்டு வர வேண்டும் என சொல்லாமல் சொன்ன, சொல்லி அடித்தமீட்சிசார்பாக, கவிஞர் கலாப்ரியாவுடன் இணைந்து அப்போது குற்றாலத்தில் ஆண்டுதோறும் நடந்தகவிதைப் பட்டறைதமிழ் சூழலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் பட்டறையில் கலந்துக் கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லலாம். இன்று பிரபலமாக இருக்கும் பலரும் அப்போது பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள்தான் (கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் இந்த வார்த்தையை சரியென்றே நினைக்கிறேன்). மணிக்கொடி‘, ‘எழுத்து‘… என நீண்ண்ண்ட வரலாற்றை கொண்ட சிறுபத்திரிகை உலகில்மீட்சிக்கும் தனி இடம் உண்டு. அது அழுத்தமாக பதித்த தடத்தில்தான் இப்போதுள்ள வாசகர்களும், எழுத்தாளர்களும் நடந்து கொண்டிருக்கிறார்கள். பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்த படைப்புகளை ஒரு சூறாவளியாக தமிழ்ச் சூழலுக்கு கொண்டு வந்தமீட்சிஒரு கட்டத்தில் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது.

அன்று அச்சில் வந்த மீட்சிஇதழ்களை இன்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். இந்த சூழலில்தான் இணையத்தில்மீட்சிவர ஆரம்பித்திருகிறது. சிறுபத்திரிகை என்ற வடிவமே துடைத்து எறியப்பட்ட நிலையில், இந்தஇணைய மீட்சியை ஆதரிக்க வேண்டிய கடமை இலக்கிய ஆர்வலர்களுக்கு இருப்பதாக கருதுகிறேன். அதனால்தான் இந்த பதிவு.

படத்துடன் உலக கவிஞர்களின் அறிமுகம், அவர்களது கவிதைகள், முக்கியமான படைப்பாளிகள், போர்ஹேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தமிழாக்கம், இசை குறித்த விமர்சனம், கட்டுரை, நேர்காணல்என புதையலே இதற்குள் புதைந்திருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த தளத்துக்கு செல்லலாம்.

தளத்தின் முகப்பிலேயே அனைத்தும் இருக்காது. தளத்தின் கீழே செல்லுங்கள். மாத வாரியாக, உதாரணமாக 2009 ஜனவரி, 2008 டிசம்பர்என தொகுப்பு இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள். உலக இலக்கியத்தை நீங்கள் பார்க்கலாம், படிக்கலாம், அசை போடலாம்.

எனது பதிவிலுள்ள ழீன் ஜெனே கீழ்மையின் அழகியல் (4 பகுதிகள்), இளையராஜாவின் இசைக் குழப்பங்கள், கதை சொல்ல மறுக்கும் புனைவுகளும் கோணங்கியின் பாழி நாவலும் ஆகிய கட்டுரைகளை இந்த தளத்திலிருந்துதான் மீள் பதிவு செய்திருக்கிறேன்

மீட்சியின் இணைய தள முகவரி: http://meetchi.wordpress.com/


சாரு நிவேதிதா: நம்பர் ஒன் எழுத்துல திருடன்?

ஜனவரி 22, 2009

இணையத்தில் வளைய வரும் நண்பர்கள் இந்தத் தலைப்பை பார்த்து அதிர்ச்சியடையக் கூடும். அல்லது எதிர்மறையாக தலைப்பை வைத்து இந்தப் பதிவு புகழ் அடைய நினைப்பதாக கருதவும் கூடும். அப்படியெல்லாம் எதுவுமில்லை. இது அக்மார்க் உண்மை. தகவல் பிழைகளுடன் தப்பும் தவறுமாக சாருவுக்குபத்தி(?)’ எழுத வருமே தவிர புதினத்துக்கும் அவருக்கும் 7 கடல், 7 மலை தூரம்.

உதாரணத்துக்கு அவரது சிறுகதை தொகுப்பை எடுத்துக் கொள்வோம். இந்த 2009ம் ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை எதுவென்றால், அது சாரு நிவேதிதாவின்முழு(?)’ சிறுகதைகள் அடங்கிய தொகுப்பானமதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்தொகுப்புதான் (உயிர்மை வெளியீடு). ‘சாரு நிவேதிதா எழுதியசிறுகதைகளின் முழு தொகுதி இது என தொகுப்பின் பின் அட்டை சொல்கிறது. உண்மையிலேயே சாருவின் முழு சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பா இது?

சத்தியமாக இல்லை. அந்த தொகுப்பில்குறிப்பிட்டு சொல்லும்படியாக இருகதைகள் மிஸ்ஸிங். ஒன்றுஇந்தியா டுடேஇதழில் வெளியாகி இலக்கிய சிந்தனைபரிசு பெற்றது. இன்னொன்றுகுமுதம்குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல். இத்தனைக்கும் இந்த இரண்டும் 70களிலோ அல்லது 80களிலோ பிரசுரமாகவில்லை. ‘புகழ்ஏணியில் அவர் ஏற ஆரம்பித்த 90களில் பிரசுரமானது. அந்த இரண்டையும் அவர் ஏன் தன் தொகுப்பில் சேர்க்கவில்லை? அங்குதான் இருக்கிறது விஷயமே.

சஃபர்என்னும் அந்தச் சிறுகதைஇந்தியா டுடேவில் வெளியாகி அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இரா. முருகனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1995ம் ஆண்டு வெளியான இலக்கிய சிந்தனைகள் தொகுதியிலும் இடம்பெற்றது. பரவலாக சிலாகிக்கப்பட்ட அந்த சிறுகதையை சாரு இந்தமுழுதொகுப்பில் சேர்க்கவில்லை. ஏன்?அதேபோல்குமுதம்இதழில்தஸ்தகீர் நெய்தல் நிலக் குறிப்புகள்‘. இதற்கு பின்னால்குசு‘ (நன்றி: சாரு) விட்டு சிரிக்கும் அளவுக்கு சில விஷயங்கள் இருக்கின்றன. ‘குமுதம்இதழில் முதலில் சாரு நிவேதிதா எழுதியகொடிக் கப்பல்குறுநாவல் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், பிரசுரமானபோதுதஸ்தகீர்நெய்தல் நிலக் குறிப்புகள்வந்தது! இதற்கும் பலத்த பாராட்டு. வரவேற்பு. ஆனால், அந்தோ பரிதாபம். இதுவும் சாருவின் முழு தொகுப்பில் இடம் பெறவில்லை. என்ன காரணம்? மறந்துவிட்டாரா? அல்லது பிரசுரமான இதழ்கள் தொலைந்து போயிற்றா? அப்படியேகாணாமல்போனாலும் சம்மந்தப்பட்ட இதழ்களை தொடர்பு கொண்டு குறைந்தபட்சம் அந்த குறிப்பிட்ட இதழ்களின் நகல்களையாவது வாங்கியிருக்கலாமே? 15 ஆண்டுகளுக்குள் பிரசுரமானவைதானே அவைகள்?

ஆனால், அப்படி எதுவும் சாரு செய்திருக்கமாட்டார். தன் பெயரில் பிரசுரமான அவை இரண்டையும் ஒரு போதும் இனி அது, தான் எழுதியதுதான் என சொல்லவேமாட்டார். காரணம், அந்த இரண்டு கதைகளும் எழுத்தாளர் ஆபிதீனால் எழுதப்பட்டவை. அந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்ததும் சம்மந்தப்பட்டவர்களின் கை கால்களில் விழுந்து தன்புகழைகாப்பாற்றிக் கொண்டார். அப்படியானால் மற்றவை எல்லாம் சாரு எழுதியதுதானேஎன அவசரப்படாதீர்கள். ஆபிதீன் துணிந்து முறையிட்டதால் அவை இரண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. மற்றவர்கள் மவுனமாக இருப்பதால், இன்று வரை அவை சாரு எழுதியதாகவேகருதப்பட்டு வருகின்றன.

ஏதோ போகிற போக்கில் சாருவின் மீது சேற்றை வீசுவதாக நினைக்காதீர்கள். சிறு பத்திரிகை அன்பர்கள் அனைவருக்கும் இந்தவிஷயம்தெரியும். ஆபிதீன் நாகூரை சேர்ந்த எழுத்தாளர். சாருவின் நண்பர். அதாவது நண்பராக இருந்தவர். பல ஆண்டுகளாக துபாயில் வாழ்ந்து வருகிறார். அவர் சாருவுக்கு நட்பின் அடிப்படையில் எழுதிய கடிதங்களும், அதில் இருந்த விவரணைகளையும், ரத்தம் கக்கக் கக்க உத்வேகத்துடன் எழுதிய படைப்புகளையும் சாருவிடம் கொடுத்திருந்தார். அதைதான் சாரு தன் பெயரில் பயன்படுத்திக் கொண்டார்‘.

இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் ஆபிதீன் எழுதிய சிறுகதை தொகுப்பானஇடம்‘ (ஸ்நேகா வெளியீடு, 348, டி. டி. கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, ஜூலை 2003ல் வெளிவந்தது) தொகுப்பில் பக்கம்: 177 முதல் 200 வரை வெளியாகியிருக்கும் கடிதங்களை பாருங்கள். இப்போது இந்தப் புத்தகம் அச்சிலோ, விற்பனையிலோ இல்லை. ‘மொத்தமாக யாரோ வாங்கி விட்டதாககாற்றில் ஒரு செய்தி கரைந்துவிட்டது..! நண்பர்களிடம் இருந்தால் அவசியம் வாங்கி படியுங்கள். சாருவின் திருட்டுத்தனம் தெளிவாக தெரியும். அவரதுஎல்லாபுதினங்களுமே எந்தளவுக்கு களவாடப்பட்டவை என்பதை உணரலாம்.

அப்படியும் இல்லாவிட்டால் இணையத்தில் இப்போதும் எழுதிவரும் நாகூர் ருமி, ஆபிதீன் (அதே அதே ஆபிதீன்தான்) ஆகியோருக்கு இ மெயில் அனுப்பி விசாரித்துப் பாருங்கள். உண்மை புரியும்.

ஆபிதீன் யார் என்றே தனக்கு தெரியாது என சாரு ஒருவேளை புளுகக் கூடும். பொய் சொல்வதும் சாரு பேசுவதும் எழுதுவதும் ஒன்றுதான் என்னும்போது இப்படியானகருத்தைஅவசியம் எதிர்பார்க்கலாம். ஆனால், ‘கவனமாகசாரு தனதுமுழுசிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக தொகுத்திருக்கும்மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்தொகுப்பிலேயே ஆபிதீன் குறித்த குறிப்புகளும், விவரங்களும் இருக்கின்றன. அதுபோக சாருவின் முதல் நாவலானஅதாவது அவரது பெயரில் வெளிவந்த – ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்நாவலின் முதல் பதிப்பை பாருங்கள். அட்டையிலுள்ள அந்த எழுத்துக்களை எழுதியது ஆபிதீன்தான். மட்டுமல்ல, அதில் முன்னுரையாக பிரேமின் முக்கியமான கட்டுரை வெளியாகியிருக்கும். நாகார்ஜுனனும், ஜமாலனும் அந்த கட்டுரையை முன்வைத்துதான் நாவலை விமர்சனம் செய்திருப்பார்கள். அந்த கட்டுரையும் சரி, ஆபிதீன் எழுதிய எழுத்தும் சரி, அதன் பின் வந்த எந்த பதிப்பிலும் இல்லை!

இதோஇடம்சிறுகதை தொகுப்பின் பின் இணைப்பாக பிரசுரமாகியிருக்கும் சில கடிதங்கள்

சாரு நிவேதிதாவின் முதல் மனைவியான விசாலாட்சியின் (சம்யுக்தா, அமரந்தா என்ற பெயர்களில் குறிப்பிடும்படியான மொழிபெயர்ப்புகளை சிறு பத்திரிகைகளில் செய்து வருபவர்) 1. 10. 2002 தேதியிட்ட கடிதம்  

டியர் மிஸ்டர் ரஃபி (நாகூர் ருமி)

சாரு நிவேதிதா ஆபிதீனிடமிருந்து மட்டும் திருடவில்லை. என் மகள் எழுதியதிலிருந்தும் திருடியுள்ளார். ஆமாம், அவள் தனது பள்ளி தாளாளரின் மோசமான நடவடிகையைப் பற்றி ஒரு கடிதம் போல் எழுதியிருந்தாள். அதிலிருந்து அவர் திருடி அதை ஒரு கதையாக்கிவிட்டார். அவருடையதிருவிளையாடல்கள்பற்றி குறிப்பில் இதையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். எந்த அளவுகு சாரு நிவேதிதா கீழே இறங்குவார் என்பதை இது விளக்கப் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

(இந்தக் கடிதத்தை விசாலாட்சி எனக்கு ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். சாரு நிவேதிதாவைஅவர்என்று குறிப்பிட்டாரா அல்லதுஅவன்என்று குறிப்பிட்டாரா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை: நாகூர் ருமி) 

 

‘இடம்’ பக்கம் : 180

காலச்சுவடுஇதழில் பிரேம் ரமேஷ் எழுதிய கடிதம்

இப்போதுகாலச்சுவடில்இந்த வம்பு. அடிதடியில் அவர் (சாரு நிவேதிதா) இறங்கியதற்கு காரணம் ஆபிதீன். ஆபிதீன் என்பவரை சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் அறிவார்கள். ‘யாத்ராவில் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய மூன்று நாவல்கள் 1. பழைய வீடு, 2. அறிந்தவர்களைக் குறித்து அறியாதவர்களுக்கு, 3. மூலம். இந்தப் படைப்புகள் இப்போது சாரு நிவேதிதாவிடம் உள்ளன. அவற்றை முறையேநதியின் சரிதம்‘, ‘108 கதைகளும் 108 கனவுகளும்‘, ‘Skiing and Buddhism’ என்று தலைப்புகளை மாற்றி தனது பெயரில் வெளியிட முயற்சிப்பதை பிரேம் ரமேஷ் (ஆகிய நாங்கள்) எதிர்த்ததால் எங்கள் மீது கோபம் கொண்டு இப்படி சாணி வாரி வீசுகிறார்.

சாரு நிவேதிதாவின் முதல் நாவலானஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்என்ற படைப்பு பிரேம் எழுதித் தர அதை தன் பெயரில் சாரு நிவேதிதா போட்டுக் கொண்டார். அதே போல்ஸீரோ டிகிரிநாவல் ரமேஷ் எழுதித் தந்தது. அதையும் தன் பெயரில் போட்டுக் கொண்டார். மேற்குறித்த இரு நாவல்களிலும் தமது குடும்பம் மற்றும் மனைவிமார்களைப் பற்றிய குறிப்புகள் தவிர மற்றவை அனைத்தும் பிரேம் ரமேஷ் உடைய எழுத்துக்களாகும். இதை எம்.டி. முத்துக் குமாரசாமி, ராஜன் குறை, தீ. கண்ணான், ரஃபி (நாகூர் ருமி), கெளதம சித்தார்த்தன் போன்றவர்கள் அறிவார்கள்.  

பிரேம் ரமேஷ் (காலச்சுவடு 29, ஏப்ரல் ஜூன் 2000)

இடம்பக்கம் : 198
சாரு நிவேதிதாவின் 14. 6. 1987 கடிதத்தின் பகுதி  

உங்கள் நாவல் அறிந்தவர்களைக் குறித்து அறியாதவர்களுக்கு  தயார். பணமிருந்தால் வெளியிடலாம். உங்கள் நாவல்பழய வீடுவை ஜெராக்ஸ் காபி எடுத்து வைத்திருக்கிறேன். என் அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் இருப்பதால் எடுக்க முடிந்தது. என் லார்ஜ் செய்து பெரிய சைஸ் தாளில் எடுத்திருக்கிறேன்.

அன்புடன்

ரவி 

‘இடம்பக்கம் : 182

சாரு நிவேதிதாவுக்கு ஆபீதீனின் முதல் கடிதம் 

துபாய் 10.15 20. 5. 1995

 

அஸ்ஸலாமு அலைக்கும் ரவி மரைக்கார்..!

ஆபீதீன். சென்ற மாதம் 13ம் தேதி என் சீதேவி வாப்பா மெளத்தானார்கள். இம்மாதம் மெளாத்தாக நீங்கள். என்ன ஆயிற்று உங்களுக்கு? எதேச்சையாக சென்ற வார குமுதத்தை ஓசியில் பார்க்க நேர்ந்தபோது பரிசு பெறாதஆனால், பிரசுரிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டசிறுகதைகளுள் சாரு நிவேதிதாவின்கொடிக் கப்பலும்ஒன்று என்று பார்த்து சற்றே முகம் சுளித்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு எழுதி உங்களுக்கு கொடுத்த எத்தனையோ குப்பைகளுள் அது ஒன்று என்று நினைவிற்கு வந்தாலும் அந்தத் தலைப்புநாகூராள் மட்டுமே உபயோகப்படுத்த முடிகிற அந்தத் தலைப்புஎன்னைக் கவர்ந்த ஒன்று. ஊரின் சாபக்கேடானசஃபர்ஐச் சொல்ல, அவ்வப் போது அங்கங்கே கிறுக்கி வைத்தவற்றை ஒன்றாகக் கூட்டி வரும் ஒன்றிற்கு (என்ன அது?) பெயராக வைக்கலாம் பின்னால் ஏதாவது (என்ன அது?) பண்ண என்று ஒரு ஆசை இருந்தது. என்னைக் கேட்காமலேயே அந்தப் பெயரை நீங்கள் எடுத்துக் கொண்டதில் வந்த அந்த முகச் சுளிப்பு, நட்சத்திர எழுத்தாளரான உங்கள் ஆக்கத்தில் அந்தப் பெயர் இன்னும் ஆழமான எழுத்திற்கு வித்திட்டிருக்கக் கூடும் என்ற நினைப்பில் தணிந்தது. அது அப்படியே இருந்திருக்கலாம். நேற்று ஒருவன் இந்தியா டுடேவைக் கொண்டு வந்து ஓசியில்  அவன் யாரிடம் ஓசி வாங்கினானோ? படிக்கக் கொடுத்தான். சந்திரிகா மாமியை ரசித்துக் கொண்டே உள்ளே போனால், அங்கேயும் தலைவர் ரவி மரைக்கார். அட, அண்ணன் இப்ப ரொம்ப பிரபலம்தான் போலும் என்றசஃபர்ஐ வாசித்தால்.

அப்படியென்றால் கொடிக் கப்பலும் தலைப்பு மட்டுமல்லாமல் உள்ளே உள்ளதும் வார்த்தைக்கு வார்த்தை என் கிறுக்கலா? சஃபரில் நீங்கள் அநேகமாக மாற்றியிருக்கிற ஒரு வார்த்தைஅம்மாவாகத்தான் இருக்கும் என்று ஒரு யூகம். வாப்பா இருக்கிற ஊர்லஉம்மாதான் வருவாஹா நானா! அது போகட்டும். உங்கள் பெயரில் அதை வெளியிட என்ன காரணம் இருக்கக் கூடும்? உங்களிடம் சொல்ல பிரச்னைகள் ஏதுமில்லையா? இல்லாவிட்டால் புதிதாக அதை நீங்களே உருவாக்கும் ரகம் என்பதால்சரக்குபற்றி சந்தேகமில்லை! உங்களின் உதவியால்யாத்ராவிலும், கணையாழியிலும் வெளியான கதை, குறுநாவல்களைப் பாராட்டிய நாலைந்து பேரைத் தவிர, நல்ல எழுத்தை பார்க்காதவர்களாய் நான் நினைக்குமளவு என் எழுத்தின் மேல் எனக்கு மதிப்பு. அந்த மதிப்போடு, என் கடிதங்கள் உட்படபழய வீடுநாவலையும் சேர்த்து புத்தகமாய் போடுவது பற்றி நீங்கள் என்னிடம் பேசும்போது, எழுதும்போது, ‘போய் குப்பையில் கொட்டுங்கள்என்று கடுப்படித்திருக்கிறேன். அதனால்தான் இப்படி கொட்டியிருக்கிறீர்களோ? அல்லது மறந்து போய் நீங்கள் எழுதிய கதையை கொடுப்பதற்கு பதிலாக அதை நகலெடுத்து கொடுத்துவிட்டீர்களா? அப்படியானால் முன்பு வந்த சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் யார் மறந்து போய் உங்களிடம் கொடுத்து வைத்தவை? பணக் கஷ்டமா? ஏற்கனவே வெளியான கதையை ஆதவன், ஆனந்த விகடனுக்குக் கொடுத்து வாங்கிக் கொண்டதைநாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்புஎன்று நக்கல் பண்ணிய நீங்கள் அதற்கும் செய்திருக்கமாட்டீர்கள். வெளிநாடு சுற்றிப் பார்க்க காசில்லாத ஒரு முறை? ஊஹூம். அட, புரிந்துவிட்டது. எழுத்தின் வித வித வடிவங்களை வளர்ச்சியைப் பற்றி மூச்சு முட்ட என்னிடம் பேசி கவலைப்பட்ட நீங்கள், நான் இப்போது வெறும் விலும், லும் மட்டுமே நிற்பதில் கவலை கொண்டு அடுத்த நூற்றாண்டை ஆளப்போகும் எழுத்தின் நவீன வடிவத்தை இனம் காட்டியிருக்கிறீர்கள். வாழ்க அத்வைத எழுத்து. ரொம்ப நன்றி அண்ணே. உங்கள் நட்பு ஒரு பாக்கியம்தான்.

தமாஷ் இருக்கட்டும், துபாயின்காக்காக்கள் பற்றி இப்போது ரொம்ப சுறுசுறுப்பாக ஒரு வருடமாய் எழுதி வரும் ஒரு குறுநாவலில் (சரியாக இதுவரை பனிரெண்டு பக்கம்) மற்றம் என்று எது வந்தாலும் அது நல்லதல்ல; இப்போது இருக்கிற அமைப்பே நல்லது என்று நினைக்கிற ஒரு காக்காவிற்கு உதாரணமாக அந்தசுன்னத்சிரிப்பைத்தான் எழுதியிருக்கிறேன். உங்களின் தேவையில்லாத இஸ்லாமிய வேடத்தில் வந்த கதையைப் படித்துவிட்டு என்னை திருடனாக்குவார்கள் படித்தவர்கள். ஏன், இந்தப் புதுக் குப்பையை படித்தால் நீங்களே சொல்லக் கூடும். தேவையா இது? முதல் வேலையாக உங்களிடம் உள்ள என் எழுத்துக்கள் தாங்கிய பாவங்களைச் செய்த தாள்களைக் கொளுத்துங்கள். ஒரு நட்பை விட எந்த எழுத்தும் உயர்ந்ததல்ல.

என் மேல் தூய்மையான அன்பு காட்டிய ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். இப்படி ஒருசஃபர்செய்ய நியாயமான காரணம் இருக்கக் கூடும் (நீங்கள் சுன்னத் செய்திருப்பதால் அல்ல) என்று இன்னும் நம்புகிறேன். இலக்கிய மயிரையெல்லாம் கத்தரித்துவிட்டு சுத்தமாக ஒரு பக்கத்திற்குள் உங்கள் பதிலை எழுதுங்கள்.ரெண்டு பேரும் ஒண்ணுதானே ஆபீதீன்‘ என்று குப்பியடிக்காமல்!

ரேஷ்மாவிற்கு முத்தங்களுடன்,

ஆபீதீன்.

குறிப்பு: குமுதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாய் விளம்பரம் செய்யப்பட்டகொடிக்கப்பல்வராமல், அடுத்த வாரம்தஸ்தகீர் நெய்தல் நிலக் குறிப்புகள்வந்தது. அதுவும் ஆபிதீனுடையது! ‘பழய வீடுநாவலில் வரும் ஒரு பகுதி.

இடம்பக்கம்: 188.


ழீன் ஜெனே-கீழ்மையின் அழகியல் – 4 / பிரம்மராஜன்

ஜனவரி 21, 2009

1957இல் ஜெனே எழுதிய The Blacks நாடகத்தை 1959ஆம் ஆண்டு தர்ஞ்ங்ழ் இப்ண்ய் என்ற இயக்குநர் மேடையேற்றினார். இதில் பங்கு பெற்ற எல்லா நடிகர்களும் நீக்ரோக்கள் என்ற செய்தி கவனத்திற்குரியது. நிறைய பார்வையாளர்களை இந்த நாடகம் குழப்பிய போதிலும், விமர்சகர்களால் புரிந்து கொள்ள இயலாமல் போனாலும், சிறந்த முறையில் நடிக்கப்பட்டு பல மாதங்கள் வெற்றிகரமாய் நடந்தது. இதில் நீக்ரோக்கள், சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட அனைத்து சாராருக்குமான படிமமாக இருக்கின்றனர். மற்ற நாடகப்பாத்திரங்களைப் போலவே இவர்களிலும் தண்டனைக் குற்றவாளிகள், சிறைவாசிகள் ஆகியோரைப் பார்க்க முடியும். குற்ற உணர்வையும், பழி தீர்த்தலையும் குறித்த கனவுகளைப் பற்றிய கனவுகளை இவர்கள் காண்பவர்களாகின்றனர். Village மற்றும் virtue ஆகிய இரு பாத்திரங்கள் மாத்திரமே ஜெனேவின் இருண்ட நாடக உலகில் தனித் தன்மை கொண்டவர்கள். தம் விஷச் சூழலில் இருந்து தப்பித்து வெளியேறி, பகற்கனவுகளைத் தாண்டி, உண்மையான மானிட உறவுகளைக் காதல் மூலமாக சிருஷ்டிக்கின்றனர். கவித்துவம் மிகுந்த மொழியை The Blacksநாடகத்தில் ஜெனே கையாள்கிறார்.

1961 ஆம் ஆண்டு உருவான The Screens, அல்ஜீரியப் போர் மீதான ஜெனெவின் கடும் விமர்சனமாக அமைகிறது. இந்த நாடகத்தில் சில அம்சங்களைப் பார்த்தபின் ஜெனே அபத்த நாடக அரங்கினை விட்டு விட்டு அரசியல் யதார்த்த நாடகத்திற்கு மாறி விட்டாரோ என்ற சந்தேகம் எழுவது இயல்பு. The Blacksஇல் சொல்லப்பட்ட விஷயங்களுக்கும், The Screens நாடகத்தில் விவாதத்திற்கு உள்ளாகும் விஷயங்களுக்கும் சில பொதுத்தன்மைகள் காணப்படுகின்றன. நான்கு அடுக்குகளில் அமைந்த திறந்தவெளி அரங்கில் The Screens நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் இடம் பெறும் இந்த நாடகத்தை நிர்வாகம் செய்வது சுலபமாக இருக்கவில்லை. 1964 இல் Screens நாடகத்திற்காக தயார்ப்படுத்த வேண்டுமென்ற பிரதான நோக்கத்துடன் தொடங்கப்பட்ட Peter Brook இன் Theature of Cruelty, ஜெனேவின் நாடகத்தில் முதல் 12 காட்சிகளை மட்டுமே நிகழ்த்த முடிந்தது.

பொதுவாகச் சொல்வதானால் ஜெனேவின் எதிர்ப்புகளும், கலகமும் சடங்கியல்பானவை. இந்த சடங்கு என்பது இச்சை பூர்த்திக்கானது (Wish-fulfilment). எனவே மனோவியல் உண்மைகளைக் கொண்டதாக இருக்கின்றன. ஜெனேவின் படைப்புகள், நாடகத்திற்கு எழுத வந்த போது தன் நாவல்களில் விஷச் சூழல்கள் போலச் சுற்றிச் சூழ்ந்த பகற்கனவுகளில் இருந்து அவரால் வெளிவர முடிந்தது. இவை சமூகத்தினால் சிக்கி வைக்கப்பட்ட தனிமனிதர்களைப் பற்றிப் பேசுகின்றன. இவர்கள் தமக்கான அர்த்தங்களை சடங்குகள் மற்றும் புராணிகம் வழியாகக் கண்டுபிடிக்க முயன்று தோல்வியடைகின்றனர் The Balconyயில் வரும் புரட்சிக்காரர்களைப் போலவே.

ஜெனேயின் அரசியல் முக்கியத்துவத்தை Philp Thodyமட்டுமே சுட்டிகாட்டியிருக்கிறார். இறுதி இரண்டு நாடகங்களும் இனப் பிரச்னையையும், பிரான்சுக்கு எதிரான அல்ஜீரியாவின் துன்பப் போராட்டங்களையும் காட்டுகின்றன. அரசியல் ரீதியான பார்வையிலும் தோல்விக் கண்ணோட்டமே ஜெனேவுக்கு இருந்தாலும் ஒரு சமுதாயம் எங்ஙனம் தன்னை உருவாக்கிக் கொள்கிறது என்பதை நம்மால் கவனிக்க முடியும். மனித அனுபவங்களின் முக்கியத்துவத்தையும் ஜெனே மறுப்பதில்லை. மாறாக அவற்றுக்குப் புதிய பரிமாணங்களில் அர்த்தங்களைத் தரத் தேடுகிறார். ஆசாரமற்ற உலகு யதேச்சையானது. அர்த்தம் விளங்க சாத்தியம் தராத உலகம் ஆழம் காண முடியாததாய் இருக்கிறது.ஆனால் இவ்விரு உலகங்களும் இணையும் இடம் கவிதை பிறக்குமிடம். ஜெனேவின் ஒரு போக்கு வெளிப்புறத்திலிருந்த தினசரி வாழ்வினைப் பார்க்கிறது. இன்னொரு போக்கு முழுமையான பொய்த் தோற்றத்தை சிருஷ்டிக்க யத்தனிக்கிறது. இவ்விரு போக்குகளின் மோதலில் அனாசார உலகின் (Profane) தொடர்பு அறுந்து போய்விடுகிறது.
ஆரம்ப நாடகங்கள் இரண்டும் அவற்றின் கச்சிதத் தன்மை மூலம் சார்த்தரின் Huis clos நினைவூட்டுகின்றன. பின் கட்ட நாடகங்கள் உத்திமுறை காரணமாகவும், திறந்த வெளியை நோக்கிச் செல்வதாலும், Committedஆக இருப்பதாலும் பெர்டோல்ட் பிரெக்ட் தன்மையான காவியங்களைப் போலிருக்கின்றன. தன்னை மீறியே ஜெனே ஒரு Committed கவிஞராக இருக்கிறார். காரணம் ஜெனேவின் படைப்புச் செயலுக்கும், பார்வையாளர்களின் செயல்பாடுகளுக்கும் முரண்கள் இருக்கின்றன. ஜெனே தனது நாயகர்களை அவர்களின் சமூகப் பொருந்து சூழல்களில் இருந்து பிரித்து எடுத்து Negative heroகளாகக் காண்பித்தாலும், பார்வையாளர்கள், இந்த நாயகர்கள் எந்தச் சமூகச் சூழலில் இருந்து வந்தனரோ அங்கே அவர்களைப் பொருத்தி, Positive hero க்களாக விளக்கிக் கொள்கின்றனர். ஜெனேவின் இரட்டைநிலை இது தான்: சோஷலிஸ்ட் நாடக அரங்கினைச் சிருஷ்டிக்க மறுப்பதன் மூலம் negative revolt ஒன்றை உருவாக்குகிறார். இந்த negative revoltசமுக பூர்வமாகவே விளக்கம் பெற முடியும். இன்றைய பார்வையிலிருந்து பார்க்கும் போது கடைசி மூன்று நாடகங்களும் Antonin Artaud இன் Theatre of Cruelty பற்றிய கோட்பாடுகளை ஏற்று, ப்ரெக்டின் Theatre of Provocation ஸ்வீகரித்துக் கொண்டு, கவனம் சிதைக்கும் Theatre of Hatred ஆக மாறுகின்றன.

நன்றி: http://meetchi.wordpress.com/


ழீன் ஜெனே-கீழ்மையின் அழகியல் – 3 / பிரம்மராஜன்

ஜனவரி 21, 2009

ஜெனேவின் நாடகங்களின் உலகம் படிநிலை அமைப்பு சார்ந்தும், சடங்குகள் நிறைந்தும் இருக்கிறது. இந்த உலகம் எதிர்மாறாக்கப்பட்டசாதாரண” மதிப்பீடுகள் மற்றும் சடங்கு முறைகளின் மீது பெருமளவு சார்ந்துள்ளது. இந்த எதிர்மாறாக்கப்பட்ட மதிப்பீடுகள் ஜெனேயின் எல்லா நாடங்களுக்கும் மையமான விஷயம். சாவு ஒன்றினையும், பலியாள் ஒருவரையும் சம்மந்தப்படுத்தும் இந்த நாடகங்கள்தீவினை”யின் வெற்றியைக் கொண்டாடுகின்றன. இந்தத் தீவினை, பூர்ஷ்வா சமூகங்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் மதிப்பீடுகளுக்கு மறுதலையானது. ஆட்கொள்ளும் நினைவுகள், பொய்மையான கற்பனைகள், மற்றும் தன்னிச்சையான மூலாதர விடாய்கள் ஆகியவற்றுடன், யதார்த்த உலகினை சவாலுக்கு இழுத்தபடி தம் சுய அடையாளத்தைத் தேடித்திரியும் கதாபாத்திரங்கள் இவ்வுலகில் நிறைந்துள்ளனர்.

ஜெனேவைப் பொறுத்தவரையில் நாடகங்கள் என்பவை யதார்த்த நிகழ்ச்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதற்கல்ல. அவை பகற்கனவுகள். சிறைவாசி ஒருவனின் fantasy களை வாழ்க்கைப் போலாக்கும் ஒரு முறைமை. இதே காரணத்திற்காக ஜெனேவின் நாடகங்கள் நேரடித்தன்மை மிக்க நேச்சுரலிஸத்தை நிராகரிக்கின்றன. சற்றே தூக்கலான, வகைமைப்படுத்தப்பட்ட சிறைக்காவியங்களாகவும் இவற்றைப் பார்க்கலாம்.

Death Watchஜெனேவின் முதல் ஓரங்க நாடகம். இதை ஓரளவு அவரின் உரைநடை எழுத்துக்களின் நீட்சி எனக்கூற முடியும். இந்த நாடகத்தின் களமும் ஒரு சிறைதான். நான்கு குற்றவாளிகளைப் பற்றியது. மூன்று முக்கியப் பாத்திரங்களே நாடகத்தில் வருகிறார்கள். இவர்களால் வழிபடப்படும் இன்னொருவன் வெறுமனே உரையாடல்கள் மூலம் உயிர் பெருகிறான். 1949 ல் முதல் முதலாக Death Watch பாரிஸ் நகரில் மேடை யேற்றப்பட்டது. சிறிய, ஆனால் சக்தி வாய்ந்த இந்த நாடகம் ஜெனேவின் பிற்காலத்திய நாடகங்களுக்கான ஒரு சிறந்த முகவுரையாக அமைகிறது.

சிறைவாசிகளின் குறுகலான எல்லைகளில் இருந்து விடுதலையடைந்தது The Maids என்ற நாடகம். The Maidsல் முதலில் தோன்றும் வேலைக்காரியும், எஜமானியும் நிஜத்தில் வேலைக்காரிகளே என்பதை நாம் பிறகு தான் கண்டு கொள்கிறோம். நிஜமான எஜமானி வெளியில் சென்றவுடன் வேலைக்காரிகள் நாடகம் நடிக்கின்றனர். எஜமானியின் திமிர்த்தனமும், வேலைக்காரியின் அடிமைத்தனமும் இரு வேலைக்காரப் பெண்களால் நடிக்கப்படுகின்றன. சகோதரிகள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் எஜமானியாகின்றனர். Claire என்ற பாத்திரமும், Solange என்ற பாத்திரமும் இந்த அடிமை விளையாட்டையும், இறுதியிலான ஒரு கலகத்தையும் கற்பனையாய் நடித்துப் பார்க்கின்றனர். அழகான, தங்களைவிட இளமையான எஜமானியின் மீதான காதல் வெறுப்பு உறவுகளும் நாடகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றன. அன்பு, அதீத வெறுப்பு, பாலுணர்வு சார்ந்த காதல் எல்லாமே சேர்ந்து இறுதியில் Claire இன் இறப்பில் முடிகிறது. எஜமானியின் வேடத்தில் நடித்தபடி, நிஜ எஜமானிக்குத் தயாரித்து வைத்திருந்த விஷத்தை அருந்தி இறந்து போகிறாள் Claire.

பாரிஸில் 1947 ஆம் ஆண்டு முன்னணி நடிகராயிருந்த Louis Jouvet இயக்குநராகப் பங்கேற்று The Maids நாடகத்தை மேடையேற்றினார். இந்த மேடையேற்றத்திற்குப் பிறகே ஜெனேவுக்குமரியாதைக்குரிய” உலகின் அறிந்தேற்பு கிடைத்தது. ஆனால் 1948 ஆம் ஆண்டு ஜெனேவுக்கு ஆயுள் தண்டனை நிச்சயம் கொடுக்கப்படலாம் என்ற நிலைமை இருந்தது. பிரதான இலக்கியவாதிகளான சார்த்தர், Jean Cocteau, பாப்லோ பிக்காஸோ போன்ற கலைஞர்கள் பிரான்ஸின் ஜனாதிபதிக்கு கையொப்பமிட்ட மனுக்களை அனுப்பினர். இதற்கு பிறகு ஜெனேவின் வாழ்க்கையில் சற்றே முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. ஃபிரான்ஸின் முன்னணிப் பதிப்பாளர் ஒருவர் ஜெனேயின் எழுத்துக்களை சிறந்த பதிப்பாக வெளியிட்டார். முதல் தொகுதி 1951 இல் வெளிவந்தது.

பொதுவாகவே ஜெனேவுக்கு நாடக உலகின் மீதும், நடிகர்கள், இயக்குநர்கள் மீதும் இருந்த வெறுப்பு The Balconyஎன்ற நாடகம் இங்கிலாந்தில் மேடையேற்றப்பட்ட பொழுது கலகபூர்வமாய்த் தெரியவந்தது. The Balconyமுதல் முறையாக 1957 ஆம் ஆண்டு லண்டனின் Arts Theatre Club இல் அதன் அங்கத்தினர்களுக்காக பிரத்யேகமாக மேடையேற்றப்பட்டது. Pater Zadek என்ற இளம் ஆங்கில இயக்குநர் இந்த முயற்சியை மேற்கொண்டார். ஆனால் நாடகம் நடைபெறும் பொழுதே அது நடத்தப்பட்ட விதம் குறித்து கலகம் செய்ததற்காக ஜெனே வெளியேற்றப் பட்டார். ஜெனே வாதிட்டார்: “என் நாடகம் உன்னதப் பரிமாணங்கள் கொண்ட ஒரு விபச்சார விடுதியில் அமைக்கப்பட்டிருந்தது. “பீட்டர் ஸாடெக் கேவலமான பரிமாணம் கொண்ட ஒரு விபச்சார விடுதியை மேடையில் நிறுத்தியிருக்கிறார்”. சில நாட்கள் கழித்து, லண்டனில் இருந்து வெளியான New Statesman பத்திரிகையில் (4 மே 1957) சிறந்த விவாதம் ஒன்றை முன் வைத்ததோடு மட்டுமின்றி Pater Zadek,, ஜெனேவின் மிகச் சரியான கனவாக இருந்த The Balconyநாடகத்தை நடிப்பின் வெளிப்பாடாய் மாற்றிய செயல்பாட்டில் சமரசம் நடந்துவிட்டது. இதை ஜெனேவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை என்றார் Pater Zadek.. மேலும் மிக அழகிய திருஆலயத்தில் நடத்தப்பெறும் கூட்டுப் பிரார்த்தனையின் சிறப்பமைதியுடன் தன் நாடகம் நடத்தப்பட் டிருக்கவேண்டும் என்று ஜெனே அபிப்ராயப்பட்டார்.

பொய்மைகளின் மாளிகையான இர்மாவின் விபச்சார விடுதிக்கு வருகை தரும் மனிதர்கள் தங்களின் மிக அத்யந்த, ரகசிய பகல்கனவுகளில் திளைக்கலாம். ஒருவர் நீதிபதியாக மாறி தன்முன் நிற்கும் பெண் குற்றவாளிக்கு தண்டனை வழங்கலாம். தொழுநோயாளி ஒருவனை கன்னிமேரி நேரில் தோன்றி அற்புத குணமளிக்கலாம். இதற்கான உடைகளை, ஒப்பனைகளை விடுதியின் தலைவி இர்மா வைத்திருக்கிறாள். The Maids நாடகத்தைப் போலவே The Balconyயும் நாடகத்திற்குள் ஒரு நாடகம். The Balconyயின் சிறப்பு என்னவென்றால் அது ஃபான்டஸியின் உலகைப் பற்றிய ஒரு ஃபான்டஸியின் உலகம். கீழ்ப்படிதலுக்கும் மேலாதிக்கம் செலுத்துவதற்குமான பிரத்யேக் கருவியாக செக்ஸ் இயங்குவதை ஜெனே இதில் சித்தரிக்கிறார்.

நன்றி: http://meetchi.wordpress.com/


ழீன் ஜெனே-கீழ்மையின் அழகியல் – 2 / பிரம்மராஜன்

ஜனவரி 21, 2009

ஜெனேயின் விவரணை பாலுணர்ச்சி சார்ந்தும், பொருக்குகள் நிறைந்தும், மனிதக் கழிவுகளை ஆய்வது போலவும் தோன்றிய போதிலும் மிகக் கவித்துவமாக இருக்கிறது. தலைகீழாக்கப்பட்ட முறைமாறிய மதவியல் சூழல்களைக் கொண்ட உலகினையும் அதன் அனுபவங் களையும் சித்தரிக்கப் போதுமானதாகிறது ஜெனேயின் உரைநடை. கீழ்மையைத் தேடுவதிலும், அடைவதிலும் ஜெனேவின் தேடலும் புனிதமானதாய் மாறுகிறது.

ஜெர்மானியர்களால் ஃபிரான்ஸ் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலத்தில் சிறைகளுக்குள் போவதும் வெளியில் வருவதுமாக இருந்தார் ஜெனே. சிறைதான் ஜெனேவைக் கவிஞனாக்கியது. ஒரு சமயம் ரிமாண்டில் இருக்கும் போதே தவறுதலாக சிறையில் அணியும் உடைகள் தரப்பட்டு, இன்னும் தண்டனையளிக்கப்படாத மற்ற குற்றவாளிகளுடன் தள்ளப்படுகிறார் ஜெனே. ஆனால் மற்றவர்கள் எல்லோருமே தாம் தினசரி அணியும் உடைகளை அணிந்திருக்கின்றனர். இவ்வாறு பரிகாசத்திற்கும், காழ்ப்புக்கும் உட்படுத்தப்படுகிறார் ஜெனே. இந்தக் கைதிகளில் ஒருவன் தன் தங்கைக்கு கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தான். அக்கவிதைகள் முட்டாள்தனமாக வும், தன்னிரக்கம் கொண்டவையாகவும் இருந்தபோதிலும் பாராட்டப்பட்டன. ஜெனே, அந்தக் கைதியின் அளவுக்கே கவிதை எழுத முடிமென்று நிரூபித்தார். நண்பனைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனையளிக்கப்பட்ட Maurice Pilorgeஎன்பவன் மீதான ஜெனேயின் நீண்ட கவிதைஇறங்கற்கபாடல் (1939)

கேவலமான குடிசைகள், சிறைகள், மலர்கள், ரயில் நிலையங்கள் எல்லைப்பகுதிகள், அபின், மாலுமிகள், துறைமுகங்கள், பொதுக்கழிப்பறைகள், சமஊர்வலங்கள், சேரிகளில் தங்குமிடங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, ஜெனே ஒருவித மேலோட்டமான காட்சித்தன்மையைக் கவிதை என மயங்கும்படி செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

“தமது உடல்களைத் தவிர எந்தவித அழகும் அற்ற

ஒதுக்கப்பட்டவர்களை நான் காதலிக்கிறேன்

 

என்பதுதான் ஜெனேயின் பதிலாக இருந்தது. இத்தகைய சமூக அகதிகளைப் பற்றி எழுதும்போது ஜெனே பயன்படுத்த வேண்டிய அலங்கரிப்புகள் மேற்குறிப்பிட்ட வகையில்தான் அமைய வேண்டிருக்கிறது.

1940க்கும் 1948க்கும் இடைப்பட்ட காலங்களில் ஜெனே எழுதிய Miracle of the Rose, Querelle of Brest, Funeral Rites, Our Lady of the Flowers ஆகிய நான்கு உரைநடைப் படைப்புகளை மார்ட்டின் எஸ்லின் நீண்ட வசன கவிதைகள் என்று அழைக்கலாம் என்கிறார். இக்கவிதைகளின் உலகம் ஹேமோசெக்ஸூவல் அகதிகளால் நிறைந்தது. எனினும் இவைகளை முழுமையான அளவில் நாவல் என்று கூறமுடியாது. ஜெனேவின் கூற்றுப்படியே அவருடைய எந்த ஒரு பாத்திரமும் தன் சொந்த முடிவினைத் தீர்மானிப்பதில்லை. வேறுவகையில் சொல்வதனால், இப்பாத்திரங்களின் ஆசிரியனின் இஷ்டப்படி நடவடிக்கை மேற்கொள்கிற வெளிப்பாடுகளே அவை. மிகச் சரியான வரையறுப்புக்குச் சொல்வேமானால் சிறைவாசி ஒருவனின் பாலுணர்வு சார்ந்த Fantasy களேயாகும். இந்த சிறைவாசி, சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தனிமையில் தன் பகல் கனவுகளில் மூழ்கிப் போகிறான். சமூகம் எத்தகைய அமைவை (Pattern) இவன் மீது சுமத்தி, அதற்கு ஏற்றார்போல் வாழக் கட்டாயப்படுத்துகிறதோ, அவ்வமைப்பிற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவன். எனவேதான் இந்த நூல்களில் மிகச்சீரழிந்த பேசுப் பொருளும்,கவித்துவ அழகும் வினோதமான வகையில் பிணைந்து காணப்படுகின்றன.

ஜெனேவின் நாடங்களின் உலகம் படிநிலை அமைப்பு குற்றத்திற்காக மரணதண்டனை அளிக்கப்பட்ட Maurice Pilorge என்பவன் மீதான நீண்ட இரங்கற்பாடலை 1939ஆம் ஆண்டு எழுதினார்.

நன்றி: http://meetchi.wordpress.com/


ழீன் ஜெனே-கீழ்மையின் அழகியல் – 1 / பிரம்மராஜன்

ஜனவரி 21, 2009

இதுவும் மீட்சி இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரைதான். நீளம் கருதி இதை நான்கு பகுதிகளாக மீள் பிரசுரம் செய்கிறேன். பிரம்மராஜனிடமிருந்து ஒப்புதல் பெறவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்சூனியம்

” No doubt it is one of the functions of art to replace religious faith by the effective ingredient of beauty. At least beauty must have the power of a poem, that is to say of a crime….”-Jean Genet, Letter to Pauvertபிரெஞ்சு இலக்கியத்தில் விளிம்புநிலையில் வாழ்ந்து அந்த வாழ்க்கையை சமரசமின்றி கலையாக மாற்றியவர்களில் ஜெனேவுக்கு இணையாக வேறு எவரையும் சொல்ல முடியாது. அவரது சமகாலக் கலைஞர்களின் முன்னணியில் இருந்தவர். எனினும் நவீன காலத்து தீவினையின் கவிஞனாக (Poet of Evil)ஜெனே மாத்திரமே இருக்க முடியும். 1910ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் ஒரு வேசியின் மகனாகப் பிறந்தவர் ஜெனே. தன் குழந்தைப்பிராயத்தை அனாதைகளுக்கான அரசின் இல்லத்தில் கழித்த ஜெனே பத்தாவது வயதில் திருட்டுக் குற்றத்திற்காக சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பட்டார். அவரது கல்வி எனச் சொல்லக்கூடியது இத்தகையது தான். ஐரோப்பிய தலைமறைவு வாழ்க்கையில் முப்பது ஆண்டுகளைக் கழித்து சமூகத்தின் மிகச் சீரழிந்த மனிதர்களைப் பற்றித் தெரிந்து கொண்டார். இதுவே அவரின் வாழ்க்கை முறையுமாயிற்று. அநேகமாய் அவர் சென்ற எல்லா நாடுகளிலும் ஜெனேவுக்கு தவறாமல் கிடைத்தது சிறை வாழ்க்கை. நாடுகளின் எல்லைகளைக் கடந்து செல்லுதல், சிறைகளுக்குள் மாட்டிக்கொள்ளுதல் போன்ற நிஜவாழ்க்கைச் சாகசங்கள் ஜெனேயின் யதார்த்த வாழ்வனுபவத்தைத் துண்டித்து அவரை Fancy க்கு இட்டுச் செல்லக் காரண மாயிருந்தன. செக்கஸ்லோவாகியாவையும் போலந்தையும் பிரிக்கும் எல்லைப் பகுதியைக் கடந்து செல்லும் அனுபவத்தை மிக அற்புதக் கவிதையாக்கி இருக்கிறார் ஜெனே. (The Thief’s Journal. 37-38 )

நவீன

நவீன பிரெஞ்சு இலக்கியத்தில் குறிப்பாக நாவல், நாடகம் ஆகிய துறைகளில் தனக்கானதொரு இடத்தை ஸ்தாபித்துக் கொள்ள முடிந்திருக்கிறது ஜெனேவால். 1942ஆம் ஆண்டு எங்ள்ய்ங்ள் சிறைச்சாலையில் இருந்த போது, காகிதப்பைகள் தயாரிப்பதற்காகத் கைதிகளுக்குத் தரப்பட்ட ப்ரௌன் நிற தாள்களில் அவரது முதல் நாவலான Our lady of the flowers எழுதி முடித்தார்.
நாவலின் பிரதான அம்சங்களாக இருப்பவை கொலைக்குற்றங்கள், காட்டிக் கொடுத்தல், மற்றும் ஒருபால் புணர்ச்சி (Homo Sexuality) . பெண் தரகர்கள், திருடர்கள், வேசிப் பெண்கள், ஆண்வேசிகள், ஏமாற்றுக்காரர்கள் நிறைந்தது இந்நாவல். இதில் சித்தரிக்கப்படும் உலகில்நடத்தை” என்ற பொது அர்த்தம் உள்ள சொல்லுக்கு அர்த்தமில்லாமல் போகிறது. வெளிப்பார்வைக்கு ஒழுங்கமைக்கப்பட்டது போலத் தொன்றும் ஒரு சமூகத்திற்கு வெளியேற்றப்பட்ட கீழ்மையின் மனிதர்களை அறிமுகம் செய்கிறார் ஜெனே. மானுடநிலையின் மிகக் கீழ்மையைப் பற்றிய புரிந்து கொண்டு அதைக் கலையாக வெளிப்பாடு செய்யும் மேதமை ஜெனேவிடம் காணப்படுகிறது. வெளியீட்டகம் சாராமல் தனிப்பட்ட முறையில் இந்நூல் Marc Barezatஎன்பவரால் 1943 ஆம் ஆண்டு அச்சாக்கம் செய்யப்பட்டது. மேலும் 1960கள் வரை இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் ஜெனேயின் நாவல்கள் தடை செய்யப்பட்டிருந்தன.
1952 ஆம் ஆண்டு சார்த்தர் ஜெனேவின் வாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஆழ்ந்து விமர்சித்து எக்ஸிஸ் டென்ஷியலிஸ்ட் என்ற உயர்ந்த ஸ்தானத்தை ஜெனேவுக்கு அளித்தார். எக்ஸிஸ்டென்ஷியலிஸக் கலகக்காரனான ஜெனே, முழுமுற்றான தீவினையை (Absolute Evil) அடையும் நோக்கத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாவிட்டாலும் அதைத் தன் கலையின் வாயிலாகச் சாதித்துக் கொண்டான் என்று அறிவித்தார்.
Saint Genet என்ற நூலில் சார்த்தர், Teresa of Avila வுக்கும், இடையிலான ஒப்புமையை ஆராய்கிறார். நிறைய மதாவாதிகளுக்கு சார்த்தரின் ஒப்புமை மிக அநியாயமாகத் தோன்றியிருக்கும். சார்த்தர் இந்த விஷயத்தில் எடுத்த முடிவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. புனிதத்துவம் என்பது மானுட இருப்பு நிலையின் பாவத்தன்மையை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பண்பட்ட மனநிலை (humility)ஆகுமெனின், முழுமையின் முன்னர் சகலவிதமான அகங்காரங்களும் அழிக்கப்படும் செயலாகுமெனின் புனிதத்துவத்திற்கான ஜெனேயின் தகுதி இன்னும் சிறப்பானது. தன்பாலுணர்வு சார்ந்த Fantasy களை புதினங்களாக மாற்றும் பொழுதும், தன் பகற்கனவுகளை அவற்றுக்கே உரித்தான லயம், நிறம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உள்ளார்ந்த தேவை ஆகியவற்றுடன் எழுதப்பட்ட வாக்கியங்களாக மாற்றும் பொழுதும் ஜெனே தனது கனவுலகினைக் கட்டுப்படுத்தும் திறனைப் புரிந்து கொண்டார். ஜெனேவின் நூல்களின் பொதுத்தன்மையை சார்த்தர் பின்வருமாறு கூறுகிறார்:
தன் தீவினையால் நம்மைப் பீடிக்க வைக்கும் ஜெனே அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்கிறான். அவனின் ஒவ்வொரு நூலும் பீடிப்பின் உணர்ச்சி வடிகாலின் உச்சம், ஒரு மனோவியல் நாடகம். எங்ஙனம் அவனுடைய புதிய காதல்கள் அவனின் முந்திய காதல்களைச் சொல்லுகின்றன வோ அது போல ஒவ்வொரு நூலும் வெறுமனே அதற்கு முந்திய நூலை பிரதி எடுப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் ஒவ்வொரு நூலிலும் பீடிப்புக்கு ஆளாகிய இந்த மனிதன் இன்னும் சற்றுக் கூடுதலாய், தன்னைப் பிடித்திருக்கும் துர்தேவனுக்கு எஜமானன் ஆகிவிடுகிறான். இலக்கியத்தின் பத்து வருடங்கள் மனோவியல் பகுப்பாய்வு முறை வைத்தியத்திற்கு இணையாகும்.”(Jean Paul Sartre-Saint Genet )

நன்றி: http://meetchi.wordpress.com/


கதைசொல்ல மறுக்கும் புனைவுகளும் கோணங்கியின் பாழி நாவலும்- பிரம்மராஜன்

ஜனவரி 21, 2009

மீட்சி இணையதளத்தில் நண்பர் பிரம்மராஜன் எழுதிய கட்டுரையை இங்கு மீள் பதிவு செய்கிறேன். அவரிடமிருந்து ஒப்புதல் வாங்கவில்லை என்பதையும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.  

மிழ்ப்புனைகதையின் போக்குகளைக் கூர்மையாகக் கவனித்து வந்திருப்பவர்கள் 1990களின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை அது அடைந்திருந்திருப்பது முன்னேற்றமா, தேக்கமா, சீரழிவா என்பதைத் தீர்மானிக்க முடியும். முனைப்பாகவும், வெளிப்படையாகவும், பகட்டாகவும் இந்தப் பத்தாண்டுகளில் எழுதிவந்திருப்பவர்களில் பெரும்பான்மையோர் பிரகடனம் செய்து வந்திருப்பவர்களாக இருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக இதில் சிலர் யதார்த்த வகை புனைகதைக்கு தாங்கள் மாற்று எழுத்துக்களைத் தந்துவிடப் போவதாக அறிவித்துக் கொண்டு எழுதினார்கள். இதன் பொருட்டு இவர்கள் புதிய வகை எழுத்து மொழியை உருவாக்குவதாகச் சொல்லிக் கொண்டும் எழுதினார்கள். யதார்த்த வகை எழுத்துக்கு மாற்றாக இருக்க முடியும் என்று அவர்கள் சொன்னதுவனமந்திரக் கதாச் சுருள்களும்” , “பான்டஸி” வகை எழுத்துக்களும். இதில் அவர்கள் செய்த மிகப் பெரிய புரட்சி என்னவென்றால் மொழிக் கட்டமைப்பின் மீது குறைந்தபட்ச கவனம் கூட இல்லாமல் எழுதித் தள்ளியதுதான். யதார்த்த வகை எழுத்திலும் சரி, புனைவு வகை எழுத்திலும் சரி–கவனக்குறைவான வாக்கியங்களை எழுதுபவர்களுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது. நேரடியாக பொருள் கொள்ளக் கூடிய, தெளிவான வாக்கியங்களைக் கோரும் யதார்த்த வகை எழுத்துக்களையே ஒழுங்காக எழுதத் தெரியாதவர்கள் புனைவுவகை எழுத்துக்களை எழுத இயலுமா? இதை வாசகர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த மாதிரி பிரகடனங்களை முன்மொழிந்து கொண்டு யதார்த்தவகை எழுத்துக்களுக்கு மாற்றுப் புதினங்களை (புனைவுகளை) எழுதுகிறேன் என்று எழுதிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் ஒருவிதமான கலங்கலான, உருவகங்களால் நிரம்பிப் போன, கவிதை மாதிரி தெரிகிற ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். இத்தகைய, கலங்கலான, கவிதை மாதிரித் தோற்றமளிக்கும் ஒரு உரைநடையைக் கையாள்வதால் வாசகன் அதில் ஏதோ இருக்கிறது என்று நம்பி ஏமாறுகிறான்.இந்த இடத்தில் கவிதை மொழி மற்றும் உரைநடை மொழிக்கான வேறுபாடுகள் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளை முன் வைக்கிறேன். காரணம், புனைகதையின் சகலவிதமான விமர்சனக் கேள்விகளுமே இறுதியில் புனைகதை பயன்படுத்தும் மொழியின் அடிப்படைக் கேள்விகளாக மாறுகின்றன. மேலும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்பது அடிப்படையில் அர்த்தங்களைக் கையாள்வதுதான் என்ற குறைந்தபட்ச அடிப்படைக் கருத்துக்கு மரியாதை தருபவர்களாக புனைகதை எழுதுபவர்கள் இருக்க வேண்டும். ஒரு மகத்தான கருத்தினை ஒரு புனைகதையாசிரியன் மனதில் வைத்திருக்கலாம். ஆனால் அந்த மகத்தான கருத்தின் அர்த்தத்தையும் மதிப்பீடுகளையும் அவனுடைய வாசகர்களுக்கு அவன் தெளிவுபடுத்துவதற்கு முன்னர், அவன் தனக்குத் தானே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது. ஒரு மகத்தான ஐடியாவை தனது புனைகதைக்குள் வைத்திருக்கிறேன் என்று சொல்வது மட்டும் போதாது. புனைகதை எழுதும் போது கவிதையின் அம்சங்களைக் கொண்ட மொழிநடையையும் பல நாவாலாசிரியர்கள் கையாள்கிறார்கள். இன்று சற்றே புராதன நாவலாசிரியர் போலத் தோன்றும் ஹென்றி ஜேம்ஸ் ஒரு தீவிர உதாரணம் என்றால் பின்நவீனத்துவ காலத்தில் அதிகம் பேசப்படும் விளாதிமிர் நெபக்கோவ் மற்றும் யூலியோ கோர்த்தஸார் பிற உதாரணங்கள். கவிதையின் யத்தனங்கள் ஒரு புனைகதைக்குள் இருந்தாலும் அவை இறுதியில் உரைநடையின் தர்க்க ஒழுங்குக்குள் ஒருமைப்பட்டுவிட வேண்டிய அவசியமும் கட்டாயமும் இருக்கிறது. அல்லது கவித்துவ மொழிநடைக்கும் தர்க்கரீதியான சீர்ஒழுங்கினைக் கோரும் உரைநடை மொழிக்கும் இடையே ஒரு சமன்நிலை அடையப்பட வேண்டிய அத்தியாவசியம் இருக்கிறது. கவித்துவ மொழி நினைவிலி மனதினை (Unconscious) ஆராய்கிறது. உரைநடை மொழி புத்தியின் அம்சங்களை ஆராய்கிறது. நினைவிலி மனதினை ஆராயும் கவிதை மொழிநடையை வைத்து இன்று ஒரு புனைகதை எழுதினால் அது வாசகனின் பொறுமையைச் சோதிக்கக் கூடியதாகத்தான் இருக்கும். ஏனென்றால் உலக இலக்கிய வரலாற்றில் ஒரே ஒரு ஜேம்ஸ் ஜாய்ஸ்தான் இருக்க முடியும். ஒரே ஒரு ஃபின்னகன்ஸ் வேக் (Finnegan’s Wake) தான் இருக்க முடியும்.

“Strainings of Poetry” சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள் சிறுகதைகளில் அதிகமாகவே இடம் பெறுகிறது. ஜே. ஜே.சில குறிப்புகள் நாவலின் பல பகுதிகளிலும். ஆனால் அக்கதைகளின் வெற்றி அவை இறுதியில் உரைநடையின் தர்க்கத்திற்குள் ஒன்றுபட்டு சமன் செய்து கொண்டு விடும் தன்மையே. வண்ணநிலவனின் சில கதைகளில் இத்தன்மையைப் பார்க்கலாம்.( பிணத்துக்காரர்கள், பாம்பும் பிடாரனும்,) ந. முத்துசாமியின் சிறுகதைகளில் இந்தக் கவித்துவ அம்சம் நனவோடை உத்தியில் சாதிக்கப்பட்டு இறுதியில் உரைநடையின் தர்க்க மொழிக்குள் சமன்பட்டுவிடுகிறது. இவர்கள் எழுதிய எந்தக் கதையிலும் கவனக்குறைவான வாக்கியங் களையோ அசட்டுத்தனமான, விவரணைக்கு அவசியமற்ற கவித்துவ யத்தனங்களையோ பார்க்க முடியாது.

வாழ்வின் யதார்த்தம் பற்றிய ஒரு மாயத்தோற்றத்தைத் தர வேண்டிய கட்டாயத்திலிருப்பது புனைகதை. கவிதைக்கு அப்படி இல்லை. கவிதை கவிதையாகவே இருக்கலாம். தொடர் நிகழ்வுகளையோ நிகழ்ச்சி அடுக்குகளையோ வாழ்க்கை போலவே தெரியும்படி அடுக்க வேண்டிய கட்டாயத்தில் கவிதை இல்லை. பால் லெலேரியின் ஒரு மேற்கோளை இங்கு தருவது பயனுள்ளதாக இருக்கும்: Thus understood, poetry is radically different from all prose: in particular, it is clearly opposed to the description and narration of events that tend to give the illusion of reality, that is to the novel and the tale when their aim is to give the force of truth to stories, portraits, scenes, and other representation of real life.

[Paul Valery, Remarks on Poetry [(from The Art of Poetry: tr.Denise Folliot(1958)]

இன்னும் ஒரு முக்கிய கவனிப்பை இங்கே வாசகர்களுக்கு முன் வைக்க வேண்டிய அவசியமிருக்கிறது. இந்த நவீனத்துவத்தை (நான்லீனியர், மெட்டாஃபிக்ஷன், மேஜிகல் யதார்த்தம், இத்யாதி)அறைகுறையாகப் புரிந்து கொண்டு எழுதிக் கொண்டிருக்கும் கதாச் சுருள்காரர்களும், புது எழுத்து மொழிக்காரர்களும் எப்பொழுதுமே முதலில் தம் ஆதர்ச எழுத்தாளர்களாக முன் வைப்பது போர்ஹேவையும் மார்க்வெஸ்ஸையும். போர்ஹேவை ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கு முதலில் ஒன்று தெரியும். அவர் மொழிநடை தெள்ளத் தெளிவானது. அரைவேக்காடு வாக்கியங்கள் இல்லாதது. உருவகப் படிமங்களால் அடைசலுறாதது. மார்க்வெஸ்ஸைப் பொறுத்தவரை அவர் மொழி ஆங்காங்கே கவிதையைத் தொட்டுச் செல்லும் தன்மை உடையதாய் இருப்பினும் மிகச்சிறந்த கதைசொல்லியாக விளங்குபவர். கதை சொல்வதற்குப் பதிலாக வெறும் மொழிச்சட்டகத்தை வைத்துவிடுபவர் அல்லர்.ஆனால் இன்றைய தமிழ்ப் புனைகதை ஆசிரியர்களில் சிலர் மொழிச்சட்டகத்தை பிரதியின் மையத்தில் வைத்துவிட்டு அதுதான் புனைகதை என்று சொல்கிறார்கள். இந்தப் புனைகதைகளில் கதை ஒரு புள்ளியிலிருந்து வேறு ஒரு புள்ளிக்கு நகர்த்திச் செல்லப்படுவதில்லை. அரைகுறையாகவும், அவசரத்திலும், பிரமிக்க வைக்க வேண்டுமென்ற என்ற நோக்கத்திலும் குப்பையாக தகவல்கள் அள்ளி வாசகனின் மூளைக்குள் கொட்டப்படுகின்றன. தகவல்களிலோ ஏகப்பட்ட பிழைகள் நிறைந்து கிடக்கின்றன. அர்த்தத்தையும் மதிப்பீடுகளையும் அவனுடைய வாசகர்களுக்கு அவன் தெளிவுபடுத்து வதற்கு முன்னர், தனக்குத் தானே ஒரு புனைகதையாசிரியன் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று முன்பே குறிப்பிட்டோம். ஆனால் இன்றைய நிலைமை படு மோசமாக இருக்கிறது. எழுதுபவர்கள் தாங்கள் எழுதியது தங்களுக்குப் புரிந்ததா என்று கேள்வி கூட கேட்டுக் கொள்ளாமல் நிறைய செலவு செய்து அழகான புத்தகங்கள் தயாரித்து வெளியிட்டுக் கொள்கிறார்கள். தங்களுக்குத் தாங்களே தெளிவுபடுத்திக் கொள்ளாது எழுதி வெளியிடப்படும் இந்தப் புனைகதை எழுத்துக்கள் வாசகனை மறுப்பவையாகவே வந்து சேர்ந்திருக்கின்றன. வாசகன் தன்னுடைய பிரதியை உற்பத்தி செய்து கொள்ளும் வெளி இந்தப் புதினங்களில் மறுக்கப்படுகிறது. தங்களைத் தாங்களே குழப்பிக் கொள்ளும் பிரதிகளாக இருப்பதால் இப்புதினங்கள் வாசக மறுப்புப் பிரதிகளாக உருவாவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.மேலும் ரோலான் பார்த் (Rolland Barthes)குறிப்பிட்டபிரதியின் சந்தோஷங்கள்“(pleasures of the text)இவற்றில் தேடினாலும் கிடைப்பதில்லை. குறிப்பாக கோணங்கி மற்றும் கௌதம சித்தார்த்தன் போன்றோரின் பிரதிகளைப் படிப்பதென்பது வாசகனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகவே இருக்கிறது. இவர்களின் நண்பர்களே கூட முழுமையாக இவர்களின் பிரதிகளைப் படித்திருப்பார்களா என்பது சந்தேகமே. சிலரிடம்(ஒசூர் வாசகர் வட்ட நண்பர்கள்புனைகதையாளர் .வெங்கடேசன் உட்பட) கேட்டபொழுதுஇல்லை’ என்று நேர்மையாக பதிலளித்தார்கள்)வலிந்து வரவழைத்துக் கொண்ட புதிய எழுத்து மொழி இவர்கள் கோணங்கி மற்றும் கௌதமசித்தார்த்தன் ஆகியோருடையது. உதாரணமாக பெண் என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதற்குப் பதிலாக ஸ்தீரீ என்ற சொல்லையே பயன்படுத்துவார்கள். நாசம் என்ற சொல்லுக்குப் பதிலாக ஒரிஜினல் சமஸ்கிருத சொல்லான விநாசம் என்பதையே பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் ஒரு ஒழுங்கு இருக்காது. இடையில் பெண் என்ற சொல்லும் வந்துவிடும். வாக்கியங்கள் ஒருமையில் தொடங்கி பன்மையில் முடியும். அல்லது பன்மையில் தொடங்கி ஒருமையில் முடியும். மூன்று நான்கு வாக்கியங்கள் ஒரே வாக்கியத்தில் இணைக்கப்பட்டு தொடக்கம் என்ன முடிவு என்ன என்பது தெரியாமல் செய்யப்பட்டிருக்கும். இது பிரதியாசிரியனின் கவனக்குறைவும் குழப்பமுமே தவிர வாசகனின் இயலாமை அல்ல. கோணங்கியின் ஆதர்ச அர்ஜன்டீனிய எழுத்தாளரான மார்க்வெஸ்ஸை ஏன் அவருக்குப் பிடிக்கிறது என்றால் மார்க்வெஸ்ஸின் மாஜிகல் ரியலிசத்தின் ஒரே காரணமாகத்தான். மற்றதெல்லாம் கோணங்கிக்கு பொருட்டல்ல. அவரையும் கூட கோணங்கி தெரிந்து கொண்டது (புரிந்து கொண்டது) அவருடைய நண்பரான நாகார்ஜுனனின் தப்பும் தவறுமான மொழிபெயர்ப்பின் மூலமே. கோணங்கி எழுதுகிறார்:

கிணத்தின் சறுக்கத்தில் நல்லதங்காள் என்ற சோக விநோதக் கதைப் பாடலில் அவள் பதினாறடிக் கூந்தல் இறந்த பின்னும் கிணற்று நீர் சுழலில் சுழன்று நீள்வதைக் காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்ஸின் கடைசி நாவலான பலியான கன்னியின் கூந்தல் அலையை எழுதிய கதையில் காண நேர்ந்ததால் ஸ்பானியக் கதைப் பாடலுக்கும் நல்லதங்காளின் பதினாறடிக் கூந்தலுக்கும் பக்கம் பக்கமாக ஒரே சமயத்தில் கூந்தல் வளர்வதை தமிழின் வாய்வழிக் கதை மரபாகக் கொள்ள வெள்ளையம்மாள் கிழவியின் குடலுக்குள் இரைந்து கொண்டிருக்கும் கதைச் சுருளை என்னவென்று காணமுடியாத உள்ளுரைகளை உணர்கிறேன்.”

(உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை: பக். 1 FPRIVATE “TYPE=PICT;ALT=8)”

கோணங்கியின் திட்டத்தை ஒரு வித மானுடஆய்வியல் ஒப்புநோக்கு என்று பாராட்டிவிடலாம் என்றாலும் கூட சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. முதல் கோணல் மார்க்வெஸ்ஸின் நாவல் தலைப்பைப் புரிந்து கொண்டதிலேயே ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இவர் குறிப்பிடும் மார்க்வெஸ்ஸின் நாவலின் பெயர் இவ்வாறு இருக்கிறது: Of Love and Other Demons . நாவலோ முடிவளர்வது பற்றியல்ல. நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும். பலியான கன்னி என்பது எப்படி சரியான மொழிபெயர்ப்பாகுமென்று மொழி வல்லுநர்கள்தான் நமக்குச் சொல்ல வேண்டும். கன்னி எதற்குப் பலியானாள்? கோணங்கிக்குத் தெரிய நியாயமில்லை. கன்னியான Sierva Maria வுக்கு நாவலில் 12வயதுதான் ஆகிறது. வெறிநாய்க்கடிக்கு (வெறிநாய்க் கடி அவளை ஒன்றும் செய்வதில்லை. அவள் இறப்பது காதலினால்) மருந்தில்லாத காலத்தில் அவளை வெறிநாய் கடித்து விடுவதால் கிறித்தவப் பாதிரிகள் அவளைப் பேய் பிடித்திருக்கிறது என்று பேயோட்டச் சொல்லி ஒரு இளம் பாதிரியை (34வயதான பாதிரியின் முழுப் பெயரைச் சொல்ல மூச்சு வாங்கும்: Cayetano Alcino del Espiritu Santo Delaura y Escudero) அனுப்புகிறார்கள்அவளை அடைத்து வைத்திருக்கும் கடலோரத்திலமைந்த சான்ட்டா கிளாரா கன்னிகாஸ்தீரிகள் மடத்திற்கு. டெலவ்ரா என்று சில சமயங்களிலும் கேயடெனோ என்று சில இடங்களிலும் (ரஷ்ய நாவலாசிரியர்கள் செய்வதுபோல) இந்தப் பாத்திரத்தை மாற்றி மாற்றிக் குறிப்பிடுகிறார் மார்க்வெஸ். இதனாலும் கூட கோணங்கிக்கும் அவருடைய நண்பருக்கும் குழப்ப மேற்பட்டிருக்கலாம். கான்வென்ட்டில் இருக்கும் போதே அந்தச் சிறுமியின் போர்ட்ரெய்ட்டை ஒரு ஓவியர் வரைகிறார். அதில் அவள் தேவதை போலவும், அவளுடன் சில கீழ்ப்படிதல் உள்ள அசுரகணங்களும் இருப்பது போலவும் தீட்டுகிறார். அந்தச் சிறுமிக்கும் பாதிரிக்குமிடையிலான காதல்தான் இந்த நாவலின் மையமாக அமைந்திருக்கிறது. அவளுக்கு நீண்ட முடியிருக்கிறது. உண்மை. ஆனால் நாவல் முடிவளர்வது பற்றியல்ல. ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமிக்குக் கோபமேற்பட பாதிரியின் முகத்தில் காரித் துப்புகிறாள். அதற்கு டெலவ்ரா மறு கன்னத்தைக் காட்டுவது மட்டுமின்றி ஒவ்வொரு காரித்துப்பலுக்கும் ஒருவித பாலுணர்வுத் திருப்தி அடைகிறார். நாவலில் பேய் பிடித்திருப்பது அந்தச் சிறுமிக்கு மட்டுமல்ல காதல் என்ற பேய் அந்த இளம் பாதிரியையும் பிடித்து விடுகிறது. பெண் பைத்தியக்காரிகளுக்கான விடுதிகள், அடிமைகளின் இல்லங்கள், குஷ்டரோகிகளின் இல்லங்கள் ஆகிய இவற்றின் பின்னணியில் புத்தகப் பிரியனாகவும் கவிதை ரசிகனாகவும் காதலனாகவுமிருக்கிற அந்த இளம் பாதிரியே இந்த நாவலின் பிரதான பாத்திரம். அந்தச் சிறுமியின் நீண்ட முடி நாவலின் ஒரு கட்டத்தில் ஒட்ட வெட்டப்பட்டு எரிக்கப்படுகிறது.சில தமிழ் மார்க்சீயர்கள் ஜோதிடத்தை மார்க்சீயத்துடன் சுமுகப்படுத்த வேண்டும் என்று சொன்னது போல கோணங்கியும் நல்ல தங்காளையும் ஸ்பானியக் கதைப்பாடலையும் இணைத்து சந்தோஷப்படுகிறார்.–எரிந்திராவை மணிமேகலையுடன் இணைத்தது போலவே. (பார்க்க: கல்குதிரை காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சிறப்பிதழ் பக். 143–144). இந்த ஒவ்வொரு இணைப்பின் மூலமும் அதிகப் பயனடைபவர் கோணங்கிதான். ஏனென்றால் கூடுதலாக ஒரு கதையை அவரால் உண்டுபண்ண முடியும். கோணங்கியின் மேற்கோளில் காணப்படும்ஸ்பானியக் கதைப்பாடல்” மூலத்தில் இல்லை. எனவே கோணங்கியின் இலக்கியக் கண்டுபிடுப்புகளில் ஒன்றாக அதை வைக்கலாம்.அர்த்தமிழந்த சுற்றிவளைத்தல்களையும், கதை சொல்லத் தேவையற்ற இரட்டிப்புகளையும் விலக்கி விட்டு எழுதினால் கோணங்கியின் பாழி நாவல் 50 பக்கங்களுக்கு மேல் வருவது சந்தேகமே. தேவதாசிகள் ராகம் உண்டாக்குகிறார்கள் என்று அர்த்தம் வரும்படி எழுதுவதற்காக எவ்வளவு வார்த்தைகள் விரயமாக்கப்படுகின்றன என்று பாருங்கள்:உடல் இல்லாத தேவதாசிகள் கட்டில் காலில் தோன்றி மச்ச கந்தி உருவில் நீர்யாழியில் அலைவுற்ற ராகலட்சணம் வளைவுகள் கமகங்கள் சுரங்களைப் பிடிக்கும் வழியில் அனுசுரங்கள் ஒருங்கு சேர்ந்து ராகமுண்டாக்கினர் தாசியர். (பாழி பக்:180)கோணங்கியின் பிதற்றல் என்று சொல்லும்படியான விவரித்தலுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு: (வாசகர்கள் மன்னிக்க வேண்டும்)இடைவிடாத மோனத்திலிருந்த பாம்புநெளிவு மோதிரத்தால் எட்டாவது பஞ்சமும் ஒன்பதாவது கோமள தைவதமும் சுருதி நுட்பம் கூட யாளி முகத்தில் உருக்கொண்ட துயர் ராப்பாடி பறவையென குரல் அதிர்ந்து கண்ணாடிப் பந்தாகச் சுருள் கொள்ளும் பிரதியொலி கீழ்ப்பாய்ந்து கோமளரிஷபமும் தீவிர காந்தாரமும் ஆறாவது தீவிர மத்திமமும் தந்திகள் தழுவி எதிரெதிர் ராகமும் நாத பேத ஆதாரம் கால பருவங்கள் சுற்றிப் புலர் பொழுதுகளின் குளிரையும் உதிரும் தெருவையும் வெளிப்படுத்தியது.

(பாழி. பக்: 175–176)

கோணங்கிக்கு சங்கீதம் பற்றி எதுவும் தெரியுமா என்று கோணங்கிக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இவ்வளவு டெக்னிகலாக ஏதோ எழுதியிருக்கிறாரே அவருக்குத் தெரியாமலிருக்க முடியுமா என்று வாசகர் வியக்கலாம். சங்கீதம் தெரிந்த யாரும் (Ga)என்ற ஸ்வரத்தை சாதாரண காந்தாரம், சுத்த காந்தாரம், அந்தர காந்தாரம் என்றுதான் இன்றுவரை சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் கோணங்கி புனைகதையில் ஏற்படுத்திய புரட்சிக்கு சமமானதொரு புரட்சியை சங்கீத சொற்பாடுகளில் ஏற்படுத்த விரும்பிவிட்டதால் இனிமேல் புதியதாக தீவிர காந்தாரம் என்கிற புதிய செமிடோன் (Semitone) ஒன்று தோற்றுவிக்கப்பட்டுவிடும். கோமள ரிஷபம் என்று கர்நாடக சங்கீதத்தில் யாரும் குறிப்பிட மாட்டார்கள். இந்த வார்த்தைப் பிரயோகம் ஹிந்துஸ்தானி இசையில் மாத்திரம் புழங்குகிறது. மேலும் ஒரு வியப்பு வாசகனுக்கு வர வேண்டும். அப்படியானால் கோணங்கி ஹிந்துஸ்தானி இசையிலும் பெரிய விற்பன்ன ராகிவிட்டாரா? பாழியைப் படித்தால் அப்படித்தான் தோன்றுகிறது நமக்கு. எனினும் கர்நாடக இசை, கர்நாடக இசைக்கு முந்திய தமிழிசை, ஹிந்துஸ்தானி இசை இவற்றின் வரையறைச் சொற்களை எடுத்து எடுத்து இந்த அத்தியாயத்தில் வாகான இடங்களில் செறுகி வைத்திருக்கிறார். உருவான வகையிலும் பாடப்படும் வகையிலும் மூன்றுமே (ஹிந்துஸ்தானி, தமிழிசை, கர்னாடக இசை) தனித்தன்மை கொண்டவை. ஒன்றுடன் ஒன்றைப் போட்டு குழப்ப முடியாது. சங்கராபரணம் என்ற ராகம் ஹிந்துஸ்தானியில் பிலாவல் என்று அழைக்கப்படுகிறது. தமிழிசையில் செம்பாலை என்று சொல்லப்படுகிறது. பலதளஇசை (Polyphony-பாலிஃபொனி) என்ற ஒன்றை மேற்கத்திய இசையில் வரையரைப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட பாலிஃபொனி போன்று அமைந்த நாவலை மிலன் குந்தேரா எழுது முயன்றிருக்கிறார். கோணங்கியால் ஏன் முடியாது என்று நீங்கள் நினைக்க வேண்டும்?கோணங்கிக்குப்ó பிடித்த வினைச் சொல் கீறுதல். எழுதுவதற்குப் பதிலாகக் கீறுகிறார். கீறித்தான் அவரால் எழுத முடிகிறது. இந்தக் கீறுதல்உப்புக் கத்தியில் குறைவாகவும் பாழியில் அளவுக்கு அதிகமாகவும் காணப்படுகிறது. இப்படி கோணங்கியிடம் படாதபாடு படும் மற்றொரு வார்த்தை அலாதி. நமக்கு லெக்ஸிகன் சொல்வதுபடி அலாதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் எந்த ஒன்று தனியானதோ அது. (alahida-That which is separate). கோணங்கியின் சொல்லாட்சிக்கு சில சிறந்த உதாரணங்கள்:

அதைக் கண்டதுமே ஸ்தீரிகள் அலாதி அடைகிறார்கள்

. (உப்புக் கத்தி பக். )”தமிழர் வாழ்க்கையின் சமகாலப் பிரதிபலிப்பு இல்லாத பாழி நாவல் பெரும்பாலும் உப்புக் கத்தியில் அளவாகக் குறிக்கப்பட்ட சில விஷயங்களின் விரிவாக்கமாகவே இருக்கிறது. ஒரு அகழ்வாராய்ச்சியின் ரிப்போர்ட் போல, ஆனால் தகவலறிக்கைகளின் தெளிவு கைவரப் பெறாமல் நிற்கிறது பாழி.நவீன புனைகதையாளர்களில் பலருக்கு இல்லாத துணிச்சல் கோணங்கிக்கு இருக்கிறது. தகவல்களை உறுதிசெய்து கொள்ளாமல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதில் அவர் சமர்த்தர். கோணங்கியின் பாழி நாவலின்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலோ சாக்ஸன் மொழி எழுதப்பட்டதாகத் தெரிகிறது. எடுத்துக் காட்டு:

ஆங்கிலோஸாக்சனில் எழுதப்பட்டிருந்த விக்டோரிய சரித்திர ஆசிரியர்களின் காலனிய அடிமை மனவெளி பொங்கி செடிகொடி படர்ந்து சீசாக்கள் நிரம்பி வழிகின்றன.”

(பாழி. பக்.321)

ஆனால் ஆங்கிலோ சாக்ஸன் (Anglo Saxon) என்றழைக்கப்படும் பழைய ஆங்கிலம் (Old English)8ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டுவரையில்தான் பயன்பாட்டுக்கு உள்ளாயிற்று. ஷேக்ஸ்பியருக்கு சற்றே முற்பட்டவரான ச்சாசர் (Chaucer)என்ற கவிஞரையே நாம் நவீன ஆங்கிலத்தில் எழுதுபவராகத்தான் குறிக்கிறோம். ஆனால் யாரை வைத்து கோணங்கி எழுதினாரோ அவரைக் கேட்டால்தான் நமக்குத் தெரியும் எப்படி 19ஆம் நூற்றாண்டில், வரலாறு ஆங்கிலோ சாக்ஸனில் எழுதப்பட்டதென்று.கதாபாத்திரத்தை சிருஷ்டிப்பது, அதிலும் குறிப்பாக பெண்களைச் சிருஷ்டிப்பது என்பது எவ்வளவு எளிது என்பதைக் கோணங்கியின் பாழி நாவலைப் படித்தால் தெரியும். எந்த ஒரு பெயரின் விகுதியில் வேண்டுமானாலும் ஒருள்” அல்லதுஅள்” சேர்த்து விடுங்கள். உங்களுக்கு ஒரு பெண் பாத்திரம் கிடைத்து விடுகிறாள். பாத்திரம் தேவையில்லையா, அந்த அத்தியாயத்தின் இறுதியில் அவளைப் பற்றிக் குறிப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். அந்தப் பாத்திரம் காலி. அவ்வளவு எளிது. பழைய வாசனை அடிக்கக் கூடிய பெயர்களாக வர வேண்டுமென்றால் ராகங்களின் பெயர்ப்பட்டியல் உள்ள புத்தகம் ஒன்றினைப் புரட்டி யதேச்சையாகத் தேர்ந்தெடுங்கள். ஏறத்தாழ பாழியின் பெண் கதாபாத்திரம் ஒன்று உங்களுக்குக் கிடைத்து விட்டது என்று அர்த்தம்.வானம்பாடிகள் நாவல் எழுதவில்லை. ஒரு வேளை எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும். பாழி நாவலைப் போல இருந்திருக்கும். புரியும்படியாகக் கூட இருந்திருக்கலாம். ரசிக்கும்படியாகக் கூட இருந்திருக்கலாம்.ஒரு டூரிஸ்ட்டின் மனோபாவத்தை எழுத்தில் வெளிப்படுத்தாமலிருப்பதற்கு கோணங்கியால் ஆரம்பத்திலிருந்து (கொல்லனின் ஆறு பெண்மக்கள் தொகுப்பில் தொடங்கிவிட்டது) முடியவில்லை. நான் எங்கெல்லாம் போயிருந்தேன் தெரியுமா என்பது தொனிக்கும்படியாக பாழியில் நிறைய இடங்கள் இருக்கின்றன. வாசகனுக்குப் பயன் இருக்கும் என்ற நல்ல நோக்கத்தில் கோணங்கி எழுதியிருப்பார் என்று நம்பலாம். (ஒரு இலக்கியவாதியின் டூரில் என்னென்ன இடங்கள் இடம்பெற வேண்டும்?)டேர(ட்) கார்டுகள் ஒரு பீதிக் கனவு போல கோணங்கியைத் துரத்தி வருகின்றன. உப்புக் கத்தியில் குறைவாக இருந்த இவை பாழியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெறும்படி இன்றியமையாதவையாக, வாசகன் தவிர்த்து சென்றுவிடாதபடிக்குச் செய்திருப்பது நாவலுக்கு ஒரு வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஆமாம் டேரட் கார்டுகள் என்றால் என்ன? கோணங்கியிடம் கேட்டால் தனிப்பட்ட முறையில் ஒருகல்ச்சாவி” தருவார். அதைப் போட்டுத் திறந்தால் உங்களுக்கும் தெரியும். நான் குறிப்பிடுவது அதிகபட்சமாகத் தோன்றக் கூடாது. இன்னின்ன அத்தியாயங்களை இப்படி இந்த வரிசையில் நீங்கள் படியுங்கள் என்று வாசகர்களுக்கு கடிதம் எழுதுகிறாராம். (பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் சாமத்தில் 3,5,6,2,7,9,1,4,8 என்ற வரிசைப்படி கதைகளைப் படியுங்கள். உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தையில் 2,5,6,7,8,10,9,1,3,4,11 என்ற வரிசையில் கதைகளைப் படியுங்கள் அப்போது கதைகளை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.(நன்றி. .பூரணச்சந்திரன். தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறும் எழுத்தும், சொல் புதிது, ஜனவரி மார்ச் 2001). இது எவ்வளவு பெரிய முன்னேற்றம்? இதை நவீன எலக்ட்ரானிக் யுகத்தில் பயன்படும்பாஸ் வோர்ட்”(கடவுச் சொல்?) என்ற ஒன்றைத் தெரிந்தவர்கள் இன்னும் சீக்கிரம் புரிந்து கொள்வார்கள்.மந்திரத்தன்மை நம்பப்பட வேண்டுமானால் அது குறைவாகவே பிரயோகிக்கப்பட வேண்டும். இது தொடர்பான போர்ஹேவின் மேற்கோளை இங்கு தருவது பல நவீனத்துவவாதிகளுக்கு உபயோகமாக இருக்கும்:

. . . .நம்ப முடியாப் புனைவுக் கதை வாசகனால் ஏற்றுக் கொள்ளப்படும்படியாக இருக்க வேண்டுமானால் நம்பமுடியாத புனைவுக் கதைகளில் ஒரு சமயத்தில் ஒரேயொரு நம்புவதற்கியலா அம்சம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். . . .

(அலெஃப் சிறுகதை பற்றி போர்ஹே எழுதிய குறிப்புகள். போர்ஹே கதைகள்: பக்.250)

நன்றி: http://meetchi.wordpress.com/ 

*கோணங்கியின் பாழி நாவல் வந்த சமயத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை அதன் மறுமதிப்பு வெளிவரும்(புத்தகக் கண்காட்சி-2009)நாளை எதிர்நோக்கி சந்தோஷத்துடன் இங்கு பிரசுரிக்கப்படுகிறது