சாரு நிவேதிதா: நம்பர் ஒன் எழுத்துல திருடன்?

ஜனவரி 22, 2009

இணையத்தில் வளைய வரும் நண்பர்கள் இந்தத் தலைப்பை பார்த்து அதிர்ச்சியடையக் கூடும். அல்லது எதிர்மறையாக தலைப்பை வைத்து இந்தப் பதிவு புகழ் அடைய நினைப்பதாக கருதவும் கூடும். அப்படியெல்லாம் எதுவுமில்லை. இது அக்மார்க் உண்மை. தகவல் பிழைகளுடன் தப்பும் தவறுமாக சாருவுக்குபத்தி(?)’ எழுத வருமே தவிர புதினத்துக்கும் அவருக்கும் 7 கடல், 7 மலை தூரம்.

உதாரணத்துக்கு அவரது சிறுகதை தொகுப்பை எடுத்துக் கொள்வோம். இந்த 2009ம் ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை எதுவென்றால், அது சாரு நிவேதிதாவின்முழு(?)’ சிறுகதைகள் அடங்கிய தொகுப்பானமதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்தொகுப்புதான் (உயிர்மை வெளியீடு). ‘சாரு நிவேதிதா எழுதியசிறுகதைகளின் முழு தொகுதி இது என தொகுப்பின் பின் அட்டை சொல்கிறது. உண்மையிலேயே சாருவின் முழு சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பா இது?

சத்தியமாக இல்லை. அந்த தொகுப்பில்குறிப்பிட்டு சொல்லும்படியாக இருகதைகள் மிஸ்ஸிங். ஒன்றுஇந்தியா டுடேஇதழில் வெளியாகி இலக்கிய சிந்தனைபரிசு பெற்றது. இன்னொன்றுகுமுதம்குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல். இத்தனைக்கும் இந்த இரண்டும் 70களிலோ அல்லது 80களிலோ பிரசுரமாகவில்லை. ‘புகழ்ஏணியில் அவர் ஏற ஆரம்பித்த 90களில் பிரசுரமானது. அந்த இரண்டையும் அவர் ஏன் தன் தொகுப்பில் சேர்க்கவில்லை? அங்குதான் இருக்கிறது விஷயமே.

சஃபர்என்னும் அந்தச் சிறுகதைஇந்தியா டுடேவில் வெளியாகி அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இரா. முருகனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1995ம் ஆண்டு வெளியான இலக்கிய சிந்தனைகள் தொகுதியிலும் இடம்பெற்றது. பரவலாக சிலாகிக்கப்பட்ட அந்த சிறுகதையை சாரு இந்தமுழுதொகுப்பில் சேர்க்கவில்லை. ஏன்?அதேபோல்குமுதம்இதழில்தஸ்தகீர் நெய்தல் நிலக் குறிப்புகள்‘. இதற்கு பின்னால்குசு‘ (நன்றி: சாரு) விட்டு சிரிக்கும் அளவுக்கு சில விஷயங்கள் இருக்கின்றன. ‘குமுதம்இதழில் முதலில் சாரு நிவேதிதா எழுதியகொடிக் கப்பல்குறுநாவல் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், பிரசுரமானபோதுதஸ்தகீர்நெய்தல் நிலக் குறிப்புகள்வந்தது! இதற்கும் பலத்த பாராட்டு. வரவேற்பு. ஆனால், அந்தோ பரிதாபம். இதுவும் சாருவின் முழு தொகுப்பில் இடம் பெறவில்லை. என்ன காரணம்? மறந்துவிட்டாரா? அல்லது பிரசுரமான இதழ்கள் தொலைந்து போயிற்றா? அப்படியேகாணாமல்போனாலும் சம்மந்தப்பட்ட இதழ்களை தொடர்பு கொண்டு குறைந்தபட்சம் அந்த குறிப்பிட்ட இதழ்களின் நகல்களையாவது வாங்கியிருக்கலாமே? 15 ஆண்டுகளுக்குள் பிரசுரமானவைதானே அவைகள்?

ஆனால், அப்படி எதுவும் சாரு செய்திருக்கமாட்டார். தன் பெயரில் பிரசுரமான அவை இரண்டையும் ஒரு போதும் இனி அது, தான் எழுதியதுதான் என சொல்லவேமாட்டார். காரணம், அந்த இரண்டு கதைகளும் எழுத்தாளர் ஆபிதீனால் எழுதப்பட்டவை. அந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்ததும் சம்மந்தப்பட்டவர்களின் கை கால்களில் விழுந்து தன்புகழைகாப்பாற்றிக் கொண்டார். அப்படியானால் மற்றவை எல்லாம் சாரு எழுதியதுதானேஎன அவசரப்படாதீர்கள். ஆபிதீன் துணிந்து முறையிட்டதால் அவை இரண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. மற்றவர்கள் மவுனமாக இருப்பதால், இன்று வரை அவை சாரு எழுதியதாகவேகருதப்பட்டு வருகின்றன.

ஏதோ போகிற போக்கில் சாருவின் மீது சேற்றை வீசுவதாக நினைக்காதீர்கள். சிறு பத்திரிகை அன்பர்கள் அனைவருக்கும் இந்தவிஷயம்தெரியும். ஆபிதீன் நாகூரை சேர்ந்த எழுத்தாளர். சாருவின் நண்பர். அதாவது நண்பராக இருந்தவர். பல ஆண்டுகளாக துபாயில் வாழ்ந்து வருகிறார். அவர் சாருவுக்கு நட்பின் அடிப்படையில் எழுதிய கடிதங்களும், அதில் இருந்த விவரணைகளையும், ரத்தம் கக்கக் கக்க உத்வேகத்துடன் எழுதிய படைப்புகளையும் சாருவிடம் கொடுத்திருந்தார். அதைதான் சாரு தன் பெயரில் பயன்படுத்திக் கொண்டார்‘.

இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் ஆபிதீன் எழுதிய சிறுகதை தொகுப்பானஇடம்‘ (ஸ்நேகா வெளியீடு, 348, டி. டி. கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, ஜூலை 2003ல் வெளிவந்தது) தொகுப்பில் பக்கம்: 177 முதல் 200 வரை வெளியாகியிருக்கும் கடிதங்களை பாருங்கள். இப்போது இந்தப் புத்தகம் அச்சிலோ, விற்பனையிலோ இல்லை. ‘மொத்தமாக யாரோ வாங்கி விட்டதாககாற்றில் ஒரு செய்தி கரைந்துவிட்டது..! நண்பர்களிடம் இருந்தால் அவசியம் வாங்கி படியுங்கள். சாருவின் திருட்டுத்தனம் தெளிவாக தெரியும். அவரதுஎல்லாபுதினங்களுமே எந்தளவுக்கு களவாடப்பட்டவை என்பதை உணரலாம்.

அப்படியும் இல்லாவிட்டால் இணையத்தில் இப்போதும் எழுதிவரும் நாகூர் ருமி, ஆபிதீன் (அதே அதே ஆபிதீன்தான்) ஆகியோருக்கு இ மெயில் அனுப்பி விசாரித்துப் பாருங்கள். உண்மை புரியும்.

ஆபிதீன் யார் என்றே தனக்கு தெரியாது என சாரு ஒருவேளை புளுகக் கூடும். பொய் சொல்வதும் சாரு பேசுவதும் எழுதுவதும் ஒன்றுதான் என்னும்போது இப்படியானகருத்தைஅவசியம் எதிர்பார்க்கலாம். ஆனால், ‘கவனமாகசாரு தனதுமுழுசிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக தொகுத்திருக்கும்மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்தொகுப்பிலேயே ஆபிதீன் குறித்த குறிப்புகளும், விவரங்களும் இருக்கின்றன. அதுபோக சாருவின் முதல் நாவலானஅதாவது அவரது பெயரில் வெளிவந்த – ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்நாவலின் முதல் பதிப்பை பாருங்கள். அட்டையிலுள்ள அந்த எழுத்துக்களை எழுதியது ஆபிதீன்தான். மட்டுமல்ல, அதில் முன்னுரையாக பிரேமின் முக்கியமான கட்டுரை வெளியாகியிருக்கும். நாகார்ஜுனனும், ஜமாலனும் அந்த கட்டுரையை முன்வைத்துதான் நாவலை விமர்சனம் செய்திருப்பார்கள். அந்த கட்டுரையும் சரி, ஆபிதீன் எழுதிய எழுத்தும் சரி, அதன் பின் வந்த எந்த பதிப்பிலும் இல்லை!

இதோஇடம்சிறுகதை தொகுப்பின் பின் இணைப்பாக பிரசுரமாகியிருக்கும் சில கடிதங்கள்

சாரு நிவேதிதாவின் முதல் மனைவியான விசாலாட்சியின் (சம்யுக்தா, அமரந்தா என்ற பெயர்களில் குறிப்பிடும்படியான மொழிபெயர்ப்புகளை சிறு பத்திரிகைகளில் செய்து வருபவர்) 1. 10. 2002 தேதியிட்ட கடிதம்  

டியர் மிஸ்டர் ரஃபி (நாகூர் ருமி)

சாரு நிவேதிதா ஆபிதீனிடமிருந்து மட்டும் திருடவில்லை. என் மகள் எழுதியதிலிருந்தும் திருடியுள்ளார். ஆமாம், அவள் தனது பள்ளி தாளாளரின் மோசமான நடவடிகையைப் பற்றி ஒரு கடிதம் போல் எழுதியிருந்தாள். அதிலிருந்து அவர் திருடி அதை ஒரு கதையாக்கிவிட்டார். அவருடையதிருவிளையாடல்கள்பற்றி குறிப்பில் இதையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். எந்த அளவுகு சாரு நிவேதிதா கீழே இறங்குவார் என்பதை இது விளக்கப் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

(இந்தக் கடிதத்தை விசாலாட்சி எனக்கு ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். சாரு நிவேதிதாவைஅவர்என்று குறிப்பிட்டாரா அல்லதுஅவன்என்று குறிப்பிட்டாரா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை: நாகூர் ருமி) 

 

‘இடம்’ பக்கம் : 180

காலச்சுவடுஇதழில் பிரேம் ரமேஷ் எழுதிய கடிதம்

இப்போதுகாலச்சுவடில்இந்த வம்பு. அடிதடியில் அவர் (சாரு நிவேதிதா) இறங்கியதற்கு காரணம் ஆபிதீன். ஆபிதீன் என்பவரை சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் அறிவார்கள். ‘யாத்ராவில் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய மூன்று நாவல்கள் 1. பழைய வீடு, 2. அறிந்தவர்களைக் குறித்து அறியாதவர்களுக்கு, 3. மூலம். இந்தப் படைப்புகள் இப்போது சாரு நிவேதிதாவிடம் உள்ளன. அவற்றை முறையேநதியின் சரிதம்‘, ‘108 கதைகளும் 108 கனவுகளும்‘, ‘Skiing and Buddhism’ என்று தலைப்புகளை மாற்றி தனது பெயரில் வெளியிட முயற்சிப்பதை பிரேம் ரமேஷ் (ஆகிய நாங்கள்) எதிர்த்ததால் எங்கள் மீது கோபம் கொண்டு இப்படி சாணி வாரி வீசுகிறார்.

சாரு நிவேதிதாவின் முதல் நாவலானஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்என்ற படைப்பு பிரேம் எழுதித் தர அதை தன் பெயரில் சாரு நிவேதிதா போட்டுக் கொண்டார். அதே போல்ஸீரோ டிகிரிநாவல் ரமேஷ் எழுதித் தந்தது. அதையும் தன் பெயரில் போட்டுக் கொண்டார். மேற்குறித்த இரு நாவல்களிலும் தமது குடும்பம் மற்றும் மனைவிமார்களைப் பற்றிய குறிப்புகள் தவிர மற்றவை அனைத்தும் பிரேம் ரமேஷ் உடைய எழுத்துக்களாகும். இதை எம்.டி. முத்துக் குமாரசாமி, ராஜன் குறை, தீ. கண்ணான், ரஃபி (நாகூர் ருமி), கெளதம சித்தார்த்தன் போன்றவர்கள் அறிவார்கள்.  

பிரேம் ரமேஷ் (காலச்சுவடு 29, ஏப்ரல் ஜூன் 2000)

இடம்பக்கம் : 198
சாரு நிவேதிதாவின் 14. 6. 1987 கடிதத்தின் பகுதி  

உங்கள் நாவல் அறிந்தவர்களைக் குறித்து அறியாதவர்களுக்கு  தயார். பணமிருந்தால் வெளியிடலாம். உங்கள் நாவல்பழய வீடுவை ஜெராக்ஸ் காபி எடுத்து வைத்திருக்கிறேன். என் அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் இருப்பதால் எடுக்க முடிந்தது. என் லார்ஜ் செய்து பெரிய சைஸ் தாளில் எடுத்திருக்கிறேன்.

அன்புடன்

ரவி 

‘இடம்பக்கம் : 182

சாரு நிவேதிதாவுக்கு ஆபீதீனின் முதல் கடிதம் 

துபாய் 10.15 20. 5. 1995

 

அஸ்ஸலாமு அலைக்கும் ரவி மரைக்கார்..!

ஆபீதீன். சென்ற மாதம் 13ம் தேதி என் சீதேவி வாப்பா மெளத்தானார்கள். இம்மாதம் மெளாத்தாக நீங்கள். என்ன ஆயிற்று உங்களுக்கு? எதேச்சையாக சென்ற வார குமுதத்தை ஓசியில் பார்க்க நேர்ந்தபோது பரிசு பெறாதஆனால், பிரசுரிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டசிறுகதைகளுள் சாரு நிவேதிதாவின்கொடிக் கப்பலும்ஒன்று என்று பார்த்து சற்றே முகம் சுளித்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு எழுதி உங்களுக்கு கொடுத்த எத்தனையோ குப்பைகளுள் அது ஒன்று என்று நினைவிற்கு வந்தாலும் அந்தத் தலைப்புநாகூராள் மட்டுமே உபயோகப்படுத்த முடிகிற அந்தத் தலைப்புஎன்னைக் கவர்ந்த ஒன்று. ஊரின் சாபக்கேடானசஃபர்ஐச் சொல்ல, அவ்வப் போது அங்கங்கே கிறுக்கி வைத்தவற்றை ஒன்றாகக் கூட்டி வரும் ஒன்றிற்கு (என்ன அது?) பெயராக வைக்கலாம் பின்னால் ஏதாவது (என்ன அது?) பண்ண என்று ஒரு ஆசை இருந்தது. என்னைக் கேட்காமலேயே அந்தப் பெயரை நீங்கள் எடுத்துக் கொண்டதில் வந்த அந்த முகச் சுளிப்பு, நட்சத்திர எழுத்தாளரான உங்கள் ஆக்கத்தில் அந்தப் பெயர் இன்னும் ஆழமான எழுத்திற்கு வித்திட்டிருக்கக் கூடும் என்ற நினைப்பில் தணிந்தது. அது அப்படியே இருந்திருக்கலாம். நேற்று ஒருவன் இந்தியா டுடேவைக் கொண்டு வந்து ஓசியில்  அவன் யாரிடம் ஓசி வாங்கினானோ? படிக்கக் கொடுத்தான். சந்திரிகா மாமியை ரசித்துக் கொண்டே உள்ளே போனால், அங்கேயும் தலைவர் ரவி மரைக்கார். அட, அண்ணன் இப்ப ரொம்ப பிரபலம்தான் போலும் என்றசஃபர்ஐ வாசித்தால்.

அப்படியென்றால் கொடிக் கப்பலும் தலைப்பு மட்டுமல்லாமல் உள்ளே உள்ளதும் வார்த்தைக்கு வார்த்தை என் கிறுக்கலா? சஃபரில் நீங்கள் அநேகமாக மாற்றியிருக்கிற ஒரு வார்த்தைஅம்மாவாகத்தான் இருக்கும் என்று ஒரு யூகம். வாப்பா இருக்கிற ஊர்லஉம்மாதான் வருவாஹா நானா! அது போகட்டும். உங்கள் பெயரில் அதை வெளியிட என்ன காரணம் இருக்கக் கூடும்? உங்களிடம் சொல்ல பிரச்னைகள் ஏதுமில்லையா? இல்லாவிட்டால் புதிதாக அதை நீங்களே உருவாக்கும் ரகம் என்பதால்சரக்குபற்றி சந்தேகமில்லை! உங்களின் உதவியால்யாத்ராவிலும், கணையாழியிலும் வெளியான கதை, குறுநாவல்களைப் பாராட்டிய நாலைந்து பேரைத் தவிர, நல்ல எழுத்தை பார்க்காதவர்களாய் நான் நினைக்குமளவு என் எழுத்தின் மேல் எனக்கு மதிப்பு. அந்த மதிப்போடு, என் கடிதங்கள் உட்படபழய வீடுநாவலையும் சேர்த்து புத்தகமாய் போடுவது பற்றி நீங்கள் என்னிடம் பேசும்போது, எழுதும்போது, ‘போய் குப்பையில் கொட்டுங்கள்என்று கடுப்படித்திருக்கிறேன். அதனால்தான் இப்படி கொட்டியிருக்கிறீர்களோ? அல்லது மறந்து போய் நீங்கள் எழுதிய கதையை கொடுப்பதற்கு பதிலாக அதை நகலெடுத்து கொடுத்துவிட்டீர்களா? அப்படியானால் முன்பு வந்த சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் யார் மறந்து போய் உங்களிடம் கொடுத்து வைத்தவை? பணக் கஷ்டமா? ஏற்கனவே வெளியான கதையை ஆதவன், ஆனந்த விகடனுக்குக் கொடுத்து வாங்கிக் கொண்டதைநாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்புஎன்று நக்கல் பண்ணிய நீங்கள் அதற்கும் செய்திருக்கமாட்டீர்கள். வெளிநாடு சுற்றிப் பார்க்க காசில்லாத ஒரு முறை? ஊஹூம். அட, புரிந்துவிட்டது. எழுத்தின் வித வித வடிவங்களை வளர்ச்சியைப் பற்றி மூச்சு முட்ட என்னிடம் பேசி கவலைப்பட்ட நீங்கள், நான் இப்போது வெறும் விலும், லும் மட்டுமே நிற்பதில் கவலை கொண்டு அடுத்த நூற்றாண்டை ஆளப்போகும் எழுத்தின் நவீன வடிவத்தை இனம் காட்டியிருக்கிறீர்கள். வாழ்க அத்வைத எழுத்து. ரொம்ப நன்றி அண்ணே. உங்கள் நட்பு ஒரு பாக்கியம்தான்.

தமாஷ் இருக்கட்டும், துபாயின்காக்காக்கள் பற்றி இப்போது ரொம்ப சுறுசுறுப்பாக ஒரு வருடமாய் எழுதி வரும் ஒரு குறுநாவலில் (சரியாக இதுவரை பனிரெண்டு பக்கம்) மற்றம் என்று எது வந்தாலும் அது நல்லதல்ல; இப்போது இருக்கிற அமைப்பே நல்லது என்று நினைக்கிற ஒரு காக்காவிற்கு உதாரணமாக அந்தசுன்னத்சிரிப்பைத்தான் எழுதியிருக்கிறேன். உங்களின் தேவையில்லாத இஸ்லாமிய வேடத்தில் வந்த கதையைப் படித்துவிட்டு என்னை திருடனாக்குவார்கள் படித்தவர்கள். ஏன், இந்தப் புதுக் குப்பையை படித்தால் நீங்களே சொல்லக் கூடும். தேவையா இது? முதல் வேலையாக உங்களிடம் உள்ள என் எழுத்துக்கள் தாங்கிய பாவங்களைச் செய்த தாள்களைக் கொளுத்துங்கள். ஒரு நட்பை விட எந்த எழுத்தும் உயர்ந்ததல்ல.

என் மேல் தூய்மையான அன்பு காட்டிய ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். இப்படி ஒருசஃபர்செய்ய நியாயமான காரணம் இருக்கக் கூடும் (நீங்கள் சுன்னத் செய்திருப்பதால் அல்ல) என்று இன்னும் நம்புகிறேன். இலக்கிய மயிரையெல்லாம் கத்தரித்துவிட்டு சுத்தமாக ஒரு பக்கத்திற்குள் உங்கள் பதிலை எழுதுங்கள்.ரெண்டு பேரும் ஒண்ணுதானே ஆபீதீன்‘ என்று குப்பியடிக்காமல்!

ரேஷ்மாவிற்கு முத்தங்களுடன்,

ஆபீதீன்.

குறிப்பு: குமுதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாய் விளம்பரம் செய்யப்பட்டகொடிக்கப்பல்வராமல், அடுத்த வாரம்தஸ்தகீர் நெய்தல் நிலக் குறிப்புகள்வந்தது. அதுவும் ஆபிதீனுடையது! ‘பழய வீடுநாவலில் வரும் ஒரு பகுதி.

இடம்பக்கம்: 188.

17 பதில்கள் -க்கு “சாரு நிவேதிதா: நம்பர் ஒன் எழுத்துல திருடன்?”

 1. suuniyam Says:

  நண்பர்களுக்கு,

  எதிர்பாராதவிதமாக இங்கே பின்னூட்டம் அளித்த நண்பர்கள் திருடன், குப்பன் யாஹு, ராஜ், குமார், மற்றும் சிலரது கருத்துக்கள் அழிந்துவிட்டன. எதையோ க்ளிக் செய்யப் போய் இப்படி நடந்துவிட்டது. அதற்காக நண்பர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.

  நண்பர் திருடன், பதிவிலுள்ள இந்த விவரங்கள் ஏற்கனவே 2000ம் ஆண்டு ஆபிதீனின் இணையதளத்தில் வந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

  பிறகு, நண்பர் ஆபிதீனின் இணையதள முகவரியை சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக….

  ஆபிதீனின் இணையதளம்: http://abedheen.googlepages.com/main.html

  நாகூர் ருமியின் இணையதளம்: http://www.nagorerumi.com/

 2. Raj Says:

  அதனாலென்ன…மறுபடியும் போடறோம்….இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு அந்த ஆளு அடிக்கடி ஒரு எழுத்தாளருக்கு சவால் விட்டு சொல்லுவானே…”நான் அந்த வேலை ( மாமா) பார்த்திருக்கேன், உன்னால முடியுமான்னு”…..அந்த பொழப்பே உத்தமம்.

 3. Rajathi Raj Says:

  தோழரே,
  ஆபிதீன் வலைத்தளத்தில் சாரு-வின் பக்கத்திற்கு இணைப்பு தரப்பட்டுள்ளதை கவனித்தீர்களா?

  any idea why?

  Raj.

 4. Sanjai Says:

  இதெல்லாம் உண்மையா?
  உண்மையாக இருக்கும் பட்சத்தில்,

  “இதெல்லாம் ஒரு பொழப்பா.. த்தூ.. “ :((
  அவரின் சில வரிக் கதைகளில் சில்வற்றை படித்ததுமே இவர் மேல் ”பயங்கர” நல்லெண்ணம் உருவானது. இப்போ இன்னும் கூடுகிறது.

 5. Raja Says:

  இணைய வலையுலகில் அந்த கேடு கெட்ட சாருவுக்கு முதுகு சொரிந்துகொண்டிருக்கும் சில நண்பர்களுக்கு இது புரியுமா.


 6. சாரு சுடுவார் என தெரியும்…அது பத்தியாக மட்டும் தான் என நினைத்திருந்தேன்…இப்படி கூடவா? கிறுகிறுக்குது சாமி…

 7. Alaudeen Says:

  சஃபர் தஸ்தகீர் நெய்தல் நிலக்குறிப்புகள் சிறுகதை வாசிக்க கிடைக்குமா? தஸ்தகீர் நெய்தல் நிலக்குறிப்புகள் சிறுகதை எந்த குமுதம் இதழில் வெளிவந்த்து தோழர்

 8. VAS Says:

  திரு. சூன்யம்,
  இவ்வளவு விவரம் தெரிந்துவைத்திருக்கிறீர்கள். நீங்கள் தமிழ் சிறூபத்திரிக்கை சேர்ந்தவரா? நிங்கள் ஏன் அடிக்கடி உங்கள் வலைப்பூவில் எழுதவில்லை? உங்கள் identity மனறத்துக்கொள்வதற்கு ஏதேனும் பிரத்தேயக காரணங்கள் உண்டா?

 9. அனாதி Says:

  ஹலோ, உங்களின் இப்பதிவை எனது தளத்தில் பதிய அனுமதி கிடைக்குமா ?????


 10. […] சாரு நிவேதிதா: நம்பர் ஒன் எழுத்துல திருடன்? (ஜனவரி 22, 2009) எழுதிவர் : சூன்யம்   […]

 11. poonkathirt Says:

  KUMUTHAM ITHAZHAIP PARRI THARAKKURAIVAAGA PESI VITTU APPURAM ETHARKKU INTHAVAARA KUMUTHATHTHIL SAARU KATTURAI EZHUTHAVENTUM?… UNAKKU EZHUTHA VAAYPPU THARAVILLAI ENRAAL NEE KANTAPATI EZHUTHUVAA SAARU?… UN MEL ULLA INTHA KUTRACHAATUKKU UN PATHIL ENNA?… (UNKALAI ORUMAIL AZHATHATHARKKU KAARANAM UN MEL ULLA MARIYAATHAI ENPATHAI NEE PURINTHUKKOLVAAY ENRA NAMBIKKAIYIL THAAN. UNNAI ORU MANA NOYAALI ENPAVARKALUKKU NEE THAKKA PATHIL SOLLIYE AAKAVENDUM)

 12. veeran Says:

  இணைய வலையுலகில் அந்த கேடு கெட்ட சாருவுக்கு முதுகு சொரிந்துகொண்டிருக்கும் சில நண்பர்களுக்கு இது புரியுமா.

 13. தமிழ் மாறன் Says:

  இந்த சாருவின் பேட்டியை ஏதோ தளத்தில் இன்று தான் படித்தேன். அவர் என்னவோ மிகப் பெரிய்ய்ய்ய்ய மேதாவி போல புதுமைபித்தனையும் மௌனியையும் இன்ன பிறரையும் கிழித்து எறிகிறார். உலக தரம் வாய்ந்த கதைகள் என எடுத்துக்கொண்டால், தமிழில் கடந்த 50 வருடங்களில் மொத்தமே
  30 கதைகளே தேருமாம். அவருடைய ப்ளாக்கில் ஒரு பதிவில் எழுதியுள்ளார், ஏதோ ஒரு ஆவி இவரை பிடித்துக் கொண்டது போன்ற உணர்வில் கிட்டத்தட்ட 9 மணிநேரம் விடாமல் எழுதியுள்ளதாக பதிந்துள்ளார். (நல்ல சிரிப்பு,) அந்த மாய உணர்வு தெளியுமுன்னே ஹோட்டலுக்கு சென்று கோழியை உண்டு முடித்து சுஜாதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு உரைக்கு சென்றதாக எழுதுகிறார். ஆனால் அவரது மேற்சொன்ன பேட்டியில் ஏதோ ஒரு கதை சுஜாதாவின் படைப்புக்களிலிலிருந்து சிறந்தது என எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக பதிந்துள்ளார். இதற்கு முன்னமே கூட அவரை பற்றிய கருத்து நேர்மறையில் கொண்டிருக்கவில்லை. எழுத்தால் காசு தேடும் ஒருவகை இரவு நேர அரவாணியைப்போல் தான் உணரமுடிகிறது. இதற்கு மேல் வேண்டாம்.


 14. […] மாதிரி பலர் முயன்று தெரிவித்தாலும் தெரியவருவது […]

 15. தாஜ் Says:

  நண்பனின்
  எழுத்துச் சார்ந்த வெற்றி
  பிரமாண்டமாக
  தளைத்திருக்க வேண்டிய
  தருணம் பார்த்து
  துளிர்க்கு அவ் வெற்றியின்
  கழுத்தைப் பிடித்து திருகி கொன்ற
  பாவி சாருநிவேதிதாவை
  உணர்தல் சார்ந்த
  இலக்கிய உலகம்
  ஒரு காலமும் மன்னிக்காது.

  *
  இன்றைக்கு
  பலதரப்பட்ட
  அசிங்கங்களினால்
  சாரு அனுபவிக்கும்
  நரகவேதனை
  போதாது.
  போதவே போதாது.
  கிளைமேக்ஸ்
  இனிதான்..

  *
  இலக்கியம் சார்ந்து
  அவர் ஏமாற்றப்பட்ட
  பிரச்சனையை
  இன்னும்
  வலுவாக எழுப்பச் சொல்லி
  பல முறை ஆபிதீனிடம்
  கோரிக்கை வைத்தாயிற்று.
  அவர்
  அதனை விரும்பவில்லை.
  ‘போதும் தாஜ்’ என்கிறார்.

  *
  மிஸ்டர் அலாவுதீன்.
  நீங்கள்
  ஆபிதீனின்
  ‘சஃபர்/
  தஸ்தகீர் நெய்தல் நிலக் குறிப்புகள்’ ஆகிய
  சிறுகதைகளை
  வாசிக்க ஆவல் கொள்வதை அறிந்து
  அதிக சந்தோஷம் கொள்பவன்
  நானாகத்தான் இருக்கும்.
  எனக்கு அது இரண்டும்
  அத்தனைக்குப்
  பிடித்த கதைகள்.

  குமுதத்தில்
  நான்கு வாரங்கள் வந்த
  ‘தஸ்தகீர் நெய்தல் நிலக் குறிப்புகள்’
  கதையை
  பத்திரப்படுத்தி
  வெகு காலம் வைத்திருந்தேன்.
  இப்போது அது
  எங்கே இருக்கிறது என
  தேடவேண்டும்.
  கிடைக்கும் பட்சம்
  டைப் செய்து
  ஏதேனும் ஓர் இதழில்
  பிரசுரம் செய்து
  உங்களுக்கு தெரிவிப்பேன்.

  *
  ஆபிதீனின் வலைத்தள முகவரி..
  http://abedheen.wordpress.com/

  *
  ஆபிதீனுக்காக கசியும்
  அன்பு சார்ந்த
  அத்தனை உள்ளங்களுக்கும்
  நன்றி.

  -தாஜ்
  satajdeen@gmail.com


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: